Monday, March 30, 2015

...கற்க கசடற பகுதி 32



இன்போசிஸ் ப்ளேஸ்மன்ட்:

வாழ்கையில், வேலை தேடுதல் என்ற இந்த தந்திரமான சூதடாட்டம், ஆடக் கிளம்பினார்கள் நால்வரும்.

மூன்று மணி நேரமாய் அயன் பண்ணிய சட்டையையே திரும்பத் திரும்ப அயன் பண்ணி, அசோக் சுடச் சுட தக்காளி சாதம் மாதிரி ஆக்கி வைத்திருந்தான் சட்டையை.

Tuesday, October 14, 2014

...கற்க கசடற பகுதி 31





"Ladies and Gentlemen Passengers to board Malaysian Airlines MH180 to Chennai are advised to board the flight from Gate..." அகில் நினைவுகளிலிருந்து மீண்டான்.

'அடடா.. காமேஷுக்கு ஒரு போன் பண்ண நெனச்சேன். லேட் ஆயிடுச்சே.' பத்ற்றமானவன் 'சரி அவன்  தான் ஏர்போர்ட் வரேன் சொன்னானே. எப்படியும் பாக்கத் தான போறோம்.' அவனுக்குள்ளேயே சமாதானம் சொல்லிக் கொண்டு பையை வேகமாக மூடி நடந்தான்.

'எரும..நீ என்ன புட் போர்ட்டுக்கா பொறந்த? உள்ள போ.. அதான் சீட் இருக்கு இல்ல'

Monday, July 21, 2014

...கற்க கசடற பகுதி 30


"மச்சி அந்த கரஸ்பாண்டன்ட் அடிக்கடி சொல்வாரு, 'நான்  செத்துட்டா அன்னைக்கு கூட ஸ்கூல் லீவு விட கூடாது. கிளாஸ் எடுக்கணும்..டெஸ்ட் நடக்கணும்' னு" காமேஷ் சிரித்துக் கொண்டே சொன்னான்.

Saturday, June 21, 2014

...கற்க கசடற பகுதி 29






"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது."

ஒருவன் செய்யாமல், நாம் செய்யற உதவிக்கு இந்த வானமும் பூமியும் ஈடானது. சரியா புருஞ்சுதா, நாம அடுத்த குறளுக்கு போலாமா??

காமேஷ் பார்த்தான் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கும்பல் "செய்யாமல் செய்த.. செய்யாமல் செய்த.. செய்யாமல் செய்த... செய்யாமல் செய்த உதவி.." வகுப்பில் அடுத்து நடுக்கும் விளைவை உணர்ந்து வேலையை தொடங்கியிருந்தது. காமேஷ் அவர்களை விந்தையாய் பார்த்துக் கொண்டே வகுப்பை கவனிப்பது மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு தன் கனவின் கன்டிநியுவேஷனை தொடர்ந்தான்.

Wednesday, May 28, 2014

...கற்க கசடற பகுதி 28




நாமக்கல்லின் ஏதோ ஒரு கோழிப் பண்ணை பள்ளியில் டொனேஷன் கொடுக்காமல் பிற்காலத்தில் டாக்டர்  ஆகவோ என்ஜினியர் ஆகவோ, டொனேஷன் கொடுத்து சேர்க்கப் பட்டவன் தான் காமேஷ்.

"எங்க ஸ்கூல்ல நாங்க எப்பவும் 85% மேல மார்க் வாங்கற பசங்களத் தான் சேர்க்கறது. உங்க பையன் டென்த்ல 82.5% தான் வாங்கிருக்கான். பரவாயில்ல ஒரு 75,000 (ஆண்டு 2011!!!)