Wednesday, May 28, 2014

...கற்க கசடற பகுதி 28




நாமக்கல்லின் ஏதோ ஒரு கோழிப் பண்ணை பள்ளியில் டொனேஷன் கொடுக்காமல் பிற்காலத்தில் டாக்டர்  ஆகவோ என்ஜினியர் ஆகவோ, டொனேஷன் கொடுத்து சேர்க்கப் பட்டவன் தான் காமேஷ்.

"எங்க ஸ்கூல்ல நாங்க எப்பவும் 85% மேல மார்க் வாங்கற பசங்களத் தான் சேர்க்கறது. உங்க பையன் டென்த்ல 82.5% தான் வாங்கிருக்கான். பரவாயில்ல ஒரு 75,000 (ஆண்டு 2011!!!)


பீஸ் கட்டுங்க சேர்த்துகறோம்." தாளாளர் சொல்ல, மகன் டாக்ராகிவிடுவான் என்ற சந்தோஷத்தில் பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டினர் அப்பா. பூகம்பம் வந்தது மாதிரி இருந்தது காமேஷுக்கு.

"இங்க பாருங்க இங்க சாப்பாடு சுமாராத்தான் இருக்கும். பெட்டெல்லாம் கூட எடுத்துட்டு வரக் கூடாது. பாயில தான் படுக்கணும். சுகம் கண்டா படிப்பு வராது பாருங்க..!" படிப்பு என்ன பன்ரொட்டிக்கு போற பஸ்ஸா ஒன்ற கிலோமீட்டர் நடந்து போனத் தான் வருங்கறத்துக்கு!! காமேஷ் மனசுக்குள் பொறுமிக் கொண்டான்.

"முறுக்கி வளர்க்காத மீசையும், அடுச்சு வளர்காத பிள்ளையும் சரியா வளராதுங்கறது என்னோட பாலிசி."கட்டபொம்மன் மாதிரி கரஸ்பாண்டன்ட் மீசை முறுக்கி சிரிக்க, அவர் மீசை வளர்ந்திருந்த விதம் தெள்ளத் தெளிவாய் சொல்லிவிட்டது அடுத்த மேட்டரை. குலை நடுங்கியது காமேஷுக்கு.

"என் பையன் இனிமே உங்க பொறுப்புங்க. அவன் கண்ணுல எந்த கண்ணீர பாத்தாலும் பரவாயில்ல +2  ல ஆயிரத்து நூற தாண்டுனா போதுமுங்க..!"

'ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அப்பா அம்மா..' சேரனின் எமோசனல் பாடலை அகில் அவசரமாய் மொபைலில் தேடிப் பிடித்துப் போட, இதுவரைக்கும் ஆர்வமாய் பேசிக் கொண்டிருந்த காமேஷ் கொலை வெறியானான்.

"டேய். அகில் சும்மா இருடா. அப்புறம் என்ன ஆச்சு மச்சி" அர்ஜுன் கேட்டான்.

 அர்ஜுனும், அகிலும் தங்கள் பள்ளி வாழ்க்கை பற்றி அடிக்கடி பேசிக் கொள்ள, தன் பள்ளி நாட்களைப் பற்றி அதிகம் பேசாத காமேஷ் இன்று தானாகவே கதைய சொல்லிக் கொண்டிருந்தான்.

"அப்புறம் என்ன தர்மடி தர்மலிங்கம், காதுகுத்து கனகசபாபதி, பெட்டக்ஸ் அடி பாலசுந்தரம் னு ஒவ்வொரு வாத்திக்கிட்டையும் மாத்து வாங்கறது தான்.!!" காமேஷ் சொல்ல,

அகிலால் சிரிப்பை அடக்க முடியவில்லை, "மச்சி தர்மடி தர்மலிங்கம்.." சிரிப்பை கஷ்ட்டப்பட்டு அடக்கி, "சூப்பர் பேரு மச்சி!! யாரு மச்சி இப்படியெல்லாம் யோசிக்கறது..?" ஆச்சர்யமாய் கேட்க,

"அவுனுகளே தான்..!" காமேஷ்.

ஆச்சர்யமானர் இருவரும்.

"ஆமா மச்சி.. இதெல்லாம் அவனுகளே அவனுகளுக்கு வெச்சுகிட்ட பேரு. இதுல, 'அவன் பெட்டக்ஸ் அடி பாலசுந்தரம் னா நான் சூ.... அடி சொக்கலிங்கம் டா னு'  ஈகோ கருமாந்தரமெல்லாம் வேற நடக்கும்."

"மச்சி.. சத்யமாவா சொல்ற? கிளாஸ்ல இப்படியேவா பேசுவானுக?" அகிலால் நம்பவே முடியவில்லை.

"அட நீ வேற மச்சி அடிக்கறது மட்டும் இல்லாம கம்மி மார்க் வாங்குனா பொண்ணுக முன்னாடியே பசங்க நெஞ்ச புடுச்சு கிள்ளுவான் அந்த சொக்கலிங்கம்."

"அடத் தூ.." அருவெறுப்பு தாங்க முடியாமல் அர்ஜுன் துப்ப,

"நல்ல வேள பசங்கள தான!" அகில் கொஞ்சம் சமாதானமாக,

"பசங்கள, அடிச்சு டார்ச்சர் பண்ணுனா, பொண்ணுகளுக்கு வேற, 'உங்க பொண்ணுக்கு படிப்பெல்லாம் வரதுங்க, வந்து கூட்டிட்டு போயிடுங்க னு' வாரா வாரம் வீட்டுக்கு போன் போட்டு மென்டல் டார்ச்சர் பண்றது."

அகிலும், அர்ஜுனும் வாயடைத்து போனார்கள். காமேஷ் தன் பள்ளி வாழ்க்கையைப் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாததன் காரணம் இப்போது அவர்களுக்கு புரிந்தது.

எதையோ யோசித்து காமேஷ் பெரு மூச்சு விட்டான்.

"வினோத்னு கிளாஸ் மேட் மச்சி. ரொம்ப சுமாராத் தான் படிப்பான். அன்னைக்கு பிசிக்ஸ் எக்ஸாம் ல முப்பத்தஞ்சு மார்க் வாங்கினதுக்கு  கிளாஸ் ல சார் டின் கட்டிட்டு இருக்காரு, வலி தாங்காம கத்திட்டன். 'யோவ் என்னால அவ்வளவு தான் யா வாங்க முடியும். அது தான் பாஸ்சாயிட்டன் இல்ல!' பயத்துல உட்க்கார்ந்திருந்த கிளாஸ் டக் னு சிரிக்க, பிசிக்சுக்கு ரொம்ப அசிங்கமா போச்சு."

"பட்டய உருச்ட்டான பிசிகிஸ்..?" அகில்

"'இல்ல மச்சி..'அப்படிங்களா சார். போய் உட்க்காருங்கனு' விட்டுட்டான். ஆனா அவன் விட்ட காரணம் ராத்திரி எட்டு மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ் முடிச்சு போகும் போது தான் தெருஞ்சுது. வினோத் ஸ்டாப் ரூம் வரையா னு பி.டி வாத்தியார் ஜேக்கப் என் கூட வந்திட்டுருந்த வினோத்த நைசா தள்ளிட்டு போனான்." காமேஷ் கண்களை மூடி பெரு மூச்சு விட,

"அய்யயோ அப்புறம்..?" அகில் பதற

"அப்புறம் என்ன நடந்துச்சுனு எனக்கு தெரியாது மச்சி. வினோத் ஹாஸ்ட்டல் ஸ்டூடன்ட் தான் ஆனா மெஸ்ஸு க்கும் வரல, ராத்திரி தூங்க ரூமுக்கும் வரல. மறுநாள் வார்டன கேட்டா வினோத்துக்கு ஒடம்பு சரியில்ல அதனால ஆஸ்பத்திரில சேர்த்துருக்காங்கனு என்னமோ மழுப்பி சமாளிச்சான்."

"அடப் பாவிகளா..!" அதிர்ச்சியில் அகிலும், அர்ஜுனும் காமேஷைப் பார்க்க,

"மாடிப் படியிலிருந்து வழுக்கி விழுந்ததுல மண்டையில அடிபட்டு கோமா போயிட்டான்னு எச்சக்கல நாயிக எல்லாரையும் நம்ப வெச்சுட்டானுக.." எதுக்கும் கலங்காத காமேஷின் கண்கள் கலங்கியிருந்தது.

"அப்பறம் போலிஸ் அவுங்க, இவுங்க னு கொஞ்ச பேர் வந்தாங்க, ஒரு மாசம் என்னென்னமோ பண்ணி மொத்தமா மூடி மறச்சுட்டாணுக நடந்தத. கூட்டிட்டு போன ஜேக்கபுக்கும், ஸ்டாப் ரூமிலிருந்த சாருக்கும், கரஸ்பாண்டண்டுக்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது என்ன நடந்துச்சுனு. கொஞ்ச நாள் கழிச்சு அவுங்க அப்பா வந்து இன்னும் ஹாஸ்ப்பிட்டல கோமால தான் இருக்கான் சொல்லி அவன் பெட்டியெல்லாம் எடுத்துட்டு போயிட்டாரு. ஆனா அதுக்கப்புறம் ஒன்னும் நியுஸ் இல்ல. இவுனுக ரெண்டு மாசத்துல பழையபடி ஆரம்பிச்ட்டாணுக. வினோத் இப்ப நம்ம மாதிரி காலேஜ் ல படிக்கறானா இல்ல இன்னும் கூட கோ.." இதழ்கள் துடிக்க காமேஷ் கண்களைத் துடைத்தான்.

"மச்சி அதெல்லாம் ஒன்னும் ஆயிருக்காது.." அர்ஜுன் ஆதரவாய் ஆறுதல் சொல்ல,

"மச்சி எட்டு மணி வரைக்குமா ஸ்கூல் இருக்கும்?" என்று அகில் டாப்பிக்கை மாற்ற நினைத்தான்.

"அட நீ வேற மச்சி காலைல எட்டு மணியிலிருந்து ராத்திரி எட்டு மணி வரைக்கும் இண்டர்வல் கேப் கூட விடாம கிளாஸ் நடக்கும் , நாங்க சுதந்திர தினத்தன்னைக்கு கூட ஸ்பெஷல் கிளாஸ் போயிருக்கோம்." காமேஷ்

"அப்படி என்ன மச்சி நடத்துவாணுக?" அகில்,

"நடத்தறதா..? உம். ஹூம்.. மனுஷனெல்லாம் போட்டோ காப்பியர் மெஷினா மாத்த நேரம் ஆகுமில்ல அது அதுக்கான டைம்."

"அகில் எங்க தமிழ் சார் திருக்குறள் நடத்துற ஸ்டைல மட்டும் பார்த்தேன்னா, நீயே அங்க படுச்சிருந்தாலும் தமிழ வெறுத்திருப்ப.."

தொடரும்..!

No comments:

Post a Comment