Monday, March 30, 2015

...கற்க கசடற பகுதி 32



இன்போசிஸ் ப்ளேஸ்மன்ட்:

வாழ்கையில், வேலை தேடுதல் என்ற இந்த தந்திரமான சூதடாட்டம், ஆடக் கிளம்பினார்கள் நால்வரும்.

மூன்று மணி நேரமாய் அயன் பண்ணிய சட்டையையே திரும்பத் திரும்ப அயன் பண்ணி, அசோக் சுடச் சுட தக்காளி சாதம் மாதிரி ஆக்கி வைத்திருந்தான் சட்டையை.


"டேய் விளக்கென்ன என்னடா பண்ற..?! " அயன் பாக்ஸ் கிடைக்காத கடுப்பில் அர்ஜுன் கத்த,

"அட ஒரு நிமிஷம் இரு மச்சி.. நாராயண மூர்த்திக்கு ரொம்ப புடுச்ச கலர் ப்ளூ தானாம்.. எங்கிட்ட் இருக்கிறதே ஒரே ஒரு ப்ளூ சட்ட தான்.. " அசோக் அதி சிரத்தையோடு மறுபடியும் தேய்க்க,

"அப்படின்னா ஜட்டியும் ப்ளூ கலர்ல போட்டுக்க வேண்டியது தான.. " அர்ஜுன் வெறுப்பானான்.

"ஊம்.. போட்டுக்கலாம் மச்சி ஆனா தெரியாதே " அசோக் சிரிக்க,

"நீ வெளிய போட்டுக்க மச்சி.. சூப்பர் மேன் மாதிரி" அந்த வழியாக போன காமேஷ் அசால்ட்டாய் சொன்னான். ஒரு நிமிடம் அதிர்ந்தது வீடு.

அசோக்கின் அலப்பறைகளைப் பொறுத்துக் கொண்டு அனைவரும் கிளம்ப,  காமேஷ் பேரரசு படத்துக்கு போகும் சலிப்பில் வந்தான்.

"மச்சி நாரயண மூர்த்தி wife பேரு சுதா மூர்த்தி.. அவருக்கு ரெண்டு குழந்தைங்க. இதையெல்லாம் தெருஞ்சு வெச்சுக்கணும் அப்பத் தான் கம்பனில இண்ட்ரெஸ்ட்டடா இருக்கன்னு காட்டிக்க முடியும்" ப்ரீப்ளேஸ்மன்ட் டாக்கின் போது அகில் காதோரம் கிசு கிசுத்தான் அசோக்.அகிலுக்கு சிரிப்பதா அழுவதா புரியவில்லை.

"This is not a company, where you can sit back and relax.. Cradle your chair and rock back and forth..We need motivation.. We need dedication.. And as you all know Infosys is driven by values..and with this I'm finishing my PPT.. Any more questions before we get in to the process." அரவிந்தசாமி மாதிரி இருந்த சுமார்ட்டான அந்த HR ஆசாமி ஒரு வழியாய் பேச்சை கேள்வியோடு முடிக்க,

சட்டென கை உயர்த்தினான் அசோக். ஆனால் அதற்கு முன்னதாகவே இன்னொரு முந்திரிக் கொட்டை ஆசாமி கையைத் தூக்கி விட, "அடச்சே.." அசோக் எரிச்சலில் கையை உதறி இன்னும் உயர நீட்டினான்.. "ஏய் சென்னிமல உனக்கு என்னடா டௌட்டு..?" அகில் ரகசியமாய் கேட்டான்..

"நீ சும்மா இரு மச்சி இப்படி ஆக்டிவ்வா கொஸ்டீன் கேட்டாத் தான் HR இண்டெர்வியூ போது நம்ம ஃபேஸ் ரெககனைஸ் பண்ணுவாங்க.. "

அந்த முந்திரிக் கொட்டைக் கேள்விக்கான பதிலை முடித்த HR, கையைத் தூக்கிக் கொண்டே அகிலிடம் பேசிக் கொண்டிருந்த அசோக் பக்கம் திரும்பினார், "Yes..! you Mr.Gentle Man in the BLUE shirt"

அதை எதிர் பார்க்காத அசோக் "சா.. சா.. சாரி" ஒரு நொடி தடுமாற, "சாரி சார்.. I would like know the revenue of Infosys in last year." எதோ இன்கம் டேக்ஸ் அதிகாரி மாதிரி கேட்க, தலையில் கை வைத்துக் கொண்டனர் மூவரும்.

"It's a very good question." எல்லா கேள்விக்கும் பதில் சொல்லும் அதே சாங்கியத்தோடு தொடங்கிய HR, "Revenue..! What do you mean by revenue..?" அசோக்கைப் பார்த்து ஒரு நொடி நிறுத்த, அவனுக்கு டங்கு வாரு கழன்றது. நல்ல வேளையாக, அதற்குள் அவரே பதில் சொன்னார்.. "If Money is the revenue you talking about, Yes. we have generated a lot. But for us our Employees are our revenue.. and we still generating it..Even from this crowd.. may be Even you - if you are successful!!"

"மச்சி.. ட்ரைனிங் பெங்களூரா? இல்ல இங்க சென்னையே வா..?" வாசகர்களே ப்ளீஸ் கூல் டௌன்.. இன்போசிஸ் ஆப்டியூட் முடித்தவுடன் பேசுவது நம்ம அசோக் தான்.. எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான்.. இதுவும் கடந்து போகும். "ஏன் கேட்டன்னா பெங்களூர்ல மாமா வீடு இருக்கு, சென்னைனா ரூம் பாக்கணும்..அதுவும் ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல வர 19,500 சேலரில , ஒரு 5000க்கு அண்ணா நகர்ல சூப்பர்ரா ஒரு அப்பார்ட்மண்ட் பாக்கலாம்."

ஆனால் வாசகர்கள் யூகித்தது போலவே ப்ளேஸ்மன்ட் முடிவுகள் அசோக்கிற்கு சென்னையிலோ, பெங்களூரிலோ வீடு பார்க்கும் எந்த ஒரு பிரச்சனையையும் தரவில்லை. இன்டர்வியுவில்  நாராயண மூர்த்திக்கு பிடித்த ப்ளூ கலரில் சட்டை போட்டு HR ஐ அசத்த காத்திருந்த அசோக் ஆப்டியூட்டிலேயே ஊத்திக் கொண்டது வரலாற்றுச் சோகம் ஆனால், அதை விடப்  பெரிய காவியச் சோகம், காமேஷ் பெயரும், அகில் பெயரும் பட்டியலில் விட்டுப் போக, "And our last lucky candidate to get in to our second stage of interview is.... Arjun Vasudevan from Department of EEE."

அகில் இதயம் ஒரு நொடி நின்றது. "மச்சி.. சூப்பர் மச்சி.. கங்கிராட்ஸ்.. சூப்பர்"அதிர்ச்சியின் ஆனந்தத்தில் இருந்த அர்ஜுனைக் காமேஷின் கரங்கள் முதலில் சென்று வாழ்த்தியது.

"மச்சி Arjun - Department of EEE ன்னா சொன்னாங்க..!" அர்ஜூனால் நம்ப முடியவில்லை.

"அடிங்க சீன் போடாத.. எப்படி டா கிளியர் பண்ணுன..?" அகில்

"ஏய் மச்சி.. சத்தியமா சும்மா தான் அடுச்சு விட்டேன்.." அர்ஜுன் சமாதானப் படுத்திப் பேச.

சோகத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு, "ஏய். சீ..! சும்மா தான் கேட்டேன்.. கங்கிராட்ஸ்.. இன்டர்வியு நல்லா பண்ணு..! வழக்கமா 'இன்பி' இனடர்வியு ரொம்ப ஈஸி ன்னு கேள்வி பட்டிருக்கேன்." பெரு மூச்சு விட்டான் அகில். திரையில் நடிப்பதை விட வாழ்வில் நடிப்பது சில நேரம் கஷ்டமாகி விடுகிறது. அதிலும் அழுவதைப் போல் நடிப்பதை விட, சிரிப்பது போல் நடிப்பது இன்னும் கஷ்டம் தானே..!

அப்படித் தான் அகிலும் நடித்தான். சிரித்தான்.
அர்ஜுனை இன்டர்வியுவுக்கு, "ஆல் தி பெஸ்ட் சொல்லி வழி அனுப்பும் போது சிரித்தான்.."
"நல்லாத் தான் பண்ணி இருக்கேன் மச்சி.. பார்ப்போம்..ரிசல்ட் இன்னும் ஹாப்னவர் ல சொல்றாங்களாம் " என்று இன்டர்வியு முடித்து வந்த அர்ஜுன் கை குலுக்கிச் சிரித்தான்.
"And the candidates getting placed in Infosys this Year 2007 are"என்ற நம் அரவிந்த சாமியின் பட்டியலில் "Arjun Vasudevan - Department of EEE " என்ற பெயர் வந்த போதும் சிரித்தான்.
சோகத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு அகில் சிரித்தான். அந்த சிரிப்பு கண்ணீரைக் காட்டிலும் அதிகமாய் வலித்தது.

தன்னை ஒரு மாதிரி கட்டுப் படுத்திக் கொண்டு "சூப்பர் மச்சி.." என்று அகில் கை கொடுக்கப் போக, "மச்சி ஒரு நிமிஷம் அப்பா கிட்ட சொல்லிடறேன்.." என்று கையை விடுவித்துக் கொண்டு அர்ஜுன் செல்ல,

தன்னுடனேயே இருந்து, தன்னுடனேயே படித்தவன் வெற்றி பெற்று விடக் கூடாதென்றெல்லாம் இல்லை, தன்னை விட்டு விட்டு வெற்றி பெருகிறானே என்ற வருத்தத்தில் நிலை குலைந்தான்.

"ஏய் கலகிட்ட மச்சி.. சூப்பர்.. என்ன அப்பா, அம்மா ஹேப்பியா..?"அர்ஜுனைக் காட்டிலும், காமேஷ் அர்ஜுன் வெற்றிக்கு அதிகமாய் ஆனந்தப் பட்டான்.

 "இன்போசிஸ் எல்லாம் வேல செய்யறது கஷ்ட்டம் மச்சி, நான் கெடைக்க கூடாதுன்னு வேண்டிக்கிட்டு தான் இருந்தேன். எனி வே உனக்கு ஒன்னும் பிரச்சன இருக்காது" என்று லூசுத் தனமாய் இருந்தாலும் அசோக் மனதார வாழ்த்தினான். ஆனால் அகிலால் அப்படி வாழ்த்த முடியவில்லை.

"அகில் நீ சோகமா இருக்கேன்னு தெரியும். நியாயம் தான். ஆனா சும்மா நீ உன்ன கஷ்ட்டப் படுத்திக் கிட்டு எனக்கு 'கங்கிராட்ஸ் ' சொல்லாத அடுத்த கம்பனில நீ கண்டிப்பா பிளேஸ் ஆவ. அதுக்கு அப்புறம் ரெண்டு பெரும் செலிபிரேட் பண்ணுவோம் சரியா?" அர்ஜுனின் பெருந்தன்மை அவனை இன்னும் இன்னும் காயப்படுத்தியது.

காயத்துக்கு காலம் மருந்து தடவும் என்று தான் காத்திருந்தான். ஆனால் காலம் அந்த காயத்தின் மீது எட்டி உதைத்து கால் பந்து விளையாடியது.

விப்ரோ, டி.சி.எஸ், சி.டி .எஸ் என்று தொடர்ச்சியாக எட்டு கம்பனிகள் அகிலுக்கு வாசல் திறக்க மறுத்தன.

அர்ஜுனிடமிருந்து தன்னைத் தானே கொஞ்சம் விலக்கிக் கொண்டான். நட்பா? தன் வாழ்வின் வெற்றியா? எத்தனை முறை பூ போட்டுப் பார்த்தும் தன் வாழ்வின் வெற்றியே அகிலுக்கு முதலாய் வந்தது. அது எப்படி காமேஷால் கொஞ்சம் கூட பொறாமைப் படாமல் பழக முடிகிறது ஒரு வேளை அது தான் நிஜ நட்போ என்ற எண்ணம் வேறு அவனை வாட்டியது.

அந்த குழப்பமான வலி தான் ஒரு நாள் இப்படி கவிதையாக வெளி வந்தது அகிலடமிருந்து.

"நான் அடுத்தவன்
வெற்றியைப் பார்த்து
வருத்தப்படுகிறேனா..?
இல்லை..
அந்த வெற்றியின் ஆனந்தத்தில்
பங்கெடுத்துக் கொள்ளத் தானே நினைக்கிறன்..!

காலமே - நான்
பொறமைக்காரன் எல்லாம் இல்லை
இருக்கவும் விரும்பவில்லை!
ஆனால் தோல்வியின் வலிகளில் வேதனைப் படுத்தி
என்னைப் பொறமைக்காரனாய்  மாற்றி விடாதே..!"

தொடரும்..













No comments:

Post a Comment