"இல்ல பா.. நான் ஒன்னும் சும்மா ஊர சுத்தல. பிரண்ட தான் பாக்க வந்தேன்.."
.......
"அப்பா..! காலேஜ் எல்லாம் கட் அடிக்கல பா.. பஸ்ட் ஹவர் ப்ரீ..! அது தான்.."
.......
"இல்ல பா படிக்கறேன்.. ஊம்.. ஊம்.. ஒழுங்கா படிக்கறேன்..சரி.! சரி..! ஊம்.. குடு.."
........
"ஊம்.. சொல்லு மா.. சரி சரி படிக்கறேன்.. ஊர் சுத்தல. சரி மா..! அத விடு. அந்த அங்கிள் சும்மா போன போட்டு எதா உளறிட்டு இருப்பாரு. அத விடுங்கறேன் இல்ல. அரியர் வராம நான் பாத்துக்கறேன்."
.......
"சரி சரி .. நல்ல மார்க்கே எடுக்கறேன்."
.......
"ஊம்.. நந்தினியா...?"
பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த அகிலுக்கு பதறியது..
"இல்ல.. இல்ல பேசல சும்மா பாத்தோம்.. கிப்ட்டா..? ஏம்மா அதுக்கெல்லாம் நேரமில்ல மா! நீ வேற சும்மா..! சரி நான் அப்புறம் பேசுறேன்..! போன வை..!" போனை அர்ஜுன் வைக்க, "என்ன மச்சி.. என்ன ஆச்சு போட்டுக் குடுத்துட்டாரா..?"படபடப்பாய் கேட்டான் அகில்.
"இன்னும் அந்த ஆளு வீட்டுக்கே போகல மச்சி. அதுக்குள்ள போன போட்டு பத்தி வெச்ருக்காரு." அர்ஜுன் எரிச்சலாக,
"ஐயையோ.. எல்லாத்தையும் சொல்லிட்டாரா?" அகில் பதறினான்.
"இல்ல இல்ல.. அவரு ஜென்ட்டில் மேனாம்.! நந்தினி மேட்டர மட்டும் விட்டுட்டு நான் ஊர் சுத்தறேன், கிளாஸ் கட் பண்றேன், அரியர் விழுந்துரும்னு என்னென்னமோ வீட்ல ஏத்தி விட்டுருக்காரு.. " ஆர்ஜுன் சொல்ல,
"மச்சி.. ஒரு வேள உங்க லவ் ஸ்டோரிய உண்மைலயே அவரு கண்டுபிடிக்கலையோ..?" அகில் சந்தேகமாய் கேட்க,
"யாரு அவரா?. சரியான ஆளு மச்சி அந்த ஆளு..எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்..! டுவல்த் படிக்கும் போதே அவருக்கு மைல்டா ஒரு டௌவ்ட்டு இப்ப கண்டிப்பா கன்பார்ம் பண்ணிருப்பாரு." நகம் கடித்தான் அர்ஜுன்.
"மச்சி.. இல்ல அவரு சொல்லி, உங்க வீட்ல கேட்காமகீது.." அகில் முடிப்பதற்குள்
"ஹூம்..!! யாரு எங்க வீட்லய.. எங்க அப்பா கூட கொஞ்சம் யோசிப்பாரு.. ஆனா தெருஞ்சிருந்தா இந்நேரம் எங்க அம்மா இங்கேயே வந்து நின்னுருக்கும். என்னடா நந்தினிக்கு கிப்ட் எதுவும் வாங்கித் தந்தியானா கேட்கும்?" அர்ஜுன் சிரிக்க,
"என்ன வாங்கிட்டு போனன்னு சொல்ல வேண்டியது தான மச்சி." அகில் சிரித்தான்.
"நீ வேற.. சும்மா இரு மச்சி.. அவரப் பத்தி எனக்கு நல்லா தெரியும்..கண்டிப்பா எதுக்கோ ப்ளான் பண்ணிருக்காரு . ஆனா அது தான் என்னனு தெரியல..!" அர்ஜுன் பதற்றமாய் சொன்னான்.
"நான் சொல்றது புரியுதா நந்தினி?. நான் தப்பு னு சொல்ல மாட்டேன் மா.. ஆனா இப்போதைக்கு லைப், அதுல ஒரு எய்ம். அது தான் ரொம்ப முக்கியம். அத தான் பாக்கணும்." என்று அந்த ஷாப்பிங் மாலில் பொறுமையாய் பேசியபடியே நந்தினியும், அவள் அப்பாவும் நடந்து கொண்டிருந்தனர்..
''சரி இரு மச்சி.. எதுக்கும் ஒரு போன் பண்ணி பாக்கறேன்.!" அர்ஜுன் மொபைல் பட்டன்களை அழுத்த,
"டேய்.. டேய்.." என்று அகில் எதோ சொல்ல வருவதற்குள், உஷ் என்று வாயில் விரல் வைத்து மொபைலை காதில் வைத்தான் அர்ஜுன்.
"சரி பா..ஒரே ஒரு நிமிஷம் பேக புடிங்க.. ரெஸ்ட் ரூம் வரைக்கும் போயிட்டு வரேன்.." அப்பாவிடம் ஹேண்ட் பேகை கொடுத்து விட்டு அந்த கூட்டத்தில் நந்தினி மறைய, மறு நிமிடம் பைக்குள்ளிருந்து சினுங்கியது அவள் போன். ஒரு நிமிடம் சத்தம் வரும் திசையை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பின் பையை கவனித்து மெதுவாக திறந்து போனை எடுத்தார் நந்தினியின் அப்பா, "ஹலோ.."
"மச்சி.. மச்சி..!!" என்று ஹஸ்கி வாய்சில் சைகையாய் அகில் எதோ சொல்ல வர, அர்ஜுன் பதற்றமாய் சட்டென போனை வைத்தான்.
"என்ன? அவுங்க அப்பா எடுத்துட்டாரா.? ஊம்..! இதத் தான் நான் அப்ப இருந்து சொல்ல வந்தேன்.. என்னமோ பெரிய இவன் மாதிரி போன் பண்ணுன, மாட்னியா..? செத்த..! என்ன பண்ண போற..?" என்று அகில் டென்ஷனாக,
"நந்தினி.. உன் பிரெண்ட் ஆர்த்தி கூப்பிடுருந்தா மா.. எடுத்து ஹலோ சொன்னேன் கட் ஆயிடுச்சு. அதென்ன மா S.H. இனிஷியலா..?"
"ஆமா பா அவுங்க அப்பா பேரு சண்முகம் அது தான் S.H. ஆர்த்தி..! நான் அப்புறம் பேசிக்கறேன் பா.." நந்தினியும் அவள் அப்பாவும் மறுபடியும் எதையோ பேசிக் கொண்டே ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்சில் நடந்தனர்.
"அடப் பாவிகளா. அந்த அட்டு பீசு ஆர்த்திய இப்படியா டா யுஸ் பண்ணுவீங்க.. நான் கூட தமிழ் சினிமா மாதிரி ஒரு டிவிஸ்ட் எதிர் பார்த்தேன்.. அநியாயம் டா.. ஆனா தயவு செஞ்சு S.H. னா சுவீட் ஹார்ட் னு மட்டும் சொல்லிறதா மச்சி.." அகில் சிரிக்க,
"சூப்பர் மச்சி.. எப்படி கரக்ட்டா கண்டு புடுச்ச!" அர்ஜுன் அகிலுக்கு ஹை பை தட்ட கைகளை நீட்ட, அகில் கைகளை இறுக்கி கட்டிக் கொண்டு. "அடச்சே.. கைய விடு.." தட்டி விட்டான்.
"ஓவரா. சீன போடாத தம்பி.. ஒரு நாள் நீ லவ் பண்ணுவ இல்ல அப்ப நீ என்ன பேர் வெக்கறனு பாக்கறேன்..?" ஒரு நொடி யோசித்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு , "எனக்கு என்னமோ சரோஜா தேவி தான்னு தோணுது..?" அர்ஜுன் கிண்டலாய் சிரிக்க,
"சரோஜா தேவிக்கு என்ன ஆச்சு மச்சி ..?" வேறு யார் அக்கறையோடு அறைக்குள் நுழைந்தது நம்ம சென்னிமல தான்!
"......................................!!"
அகில் எரிச்சலில் எதோ சொல்ல சிரிப்பை அடக்க முடியவில்லை அர்ஜூனால்.!
"என்ன மச்சி நீ..! சென்னிமல கூட அவரு லவ்வர போன்ல அய்யனார்னு தான் சேவ் பண்ணி வெச்சுருக்காரு..! யாராவுது பேசுனா குரல மாத்தி ப்ளம்பர் மாதிரி வேற பேச வெச்சுருக்காரு.. நீ என்னோம பெரிய கவிஞன்னு சொல்ற.. இந்த சின்ன டிரிக் கூட தெரியலையே உனக்கு.! சென்னிமல கிட்ட ப்ராக்டீஸ் எடுத்துக்க மச்சி அப்ப தான் எதாவுது பிளம்பரா சே.. சாரி பிகர பிக் அப் பண்ண முடியும்.." அர்ஜுன்
"அடிங்க.. என்ன பாத்தா என்ன லூசு மாதிரி தெரியுதா..?" சென்னிமலை சூடாக .
"அதக் கூட அவ்வளவு தெளிவா சொல்லிற முடியாதே மச்சி.!" அகில் சென்னிமலைக்கு கௌண்ட்டர் கொடுக்க, சிரிப்புச் சத்தம் நிறைத்தது அறையை..!
ஆனால் இதே கேள்வியை ஒரு நாள் அகிலிடம், அர்ஜுன் கேட்ட போது அகிலால் அவ்வளவு சிரிப்பாய் ஒரு பதிலை சொல்லி விட முடியவில்லை.. விமானத்தில் சட்டென அகிலுக்கு நினைவுக்கு வந்தது அந்த நாள்.
"மச்சி என்ன பாத்தா அவளுக்கு என்ன லூசு மாதிரி தெரியுதா?" கோபத்தில் கடுகடுத்திருந்தது அர்ஜுன் முகம்..

No comments:
Post a Comment