"மச்சி அது எப்படி மச்சி..? நம்ம நாட்ல எழுத்தாளர்கள் ல பாதி பேர் நாத்திகர்களா இருக்காங்க? மியுசிக் ல இண்டரஸ்ட் இருக்கறவங்க எல்லாம் ஆன்மிகவாதியா இருக்காங்க?" ஒரு நாள் மொட்டை மாடியில் காமேஷ்.
"அட ஆமா இல்ல மச்சி.." ஆச்சர்யமானான் அகில்..
"ஏன்னா மியுசிக் இஸ் டிவைன் மச்சான்." அர்ஜுன்.
"எழுத்து டிவைன் எல்லாம் இல்ல மச்சான் அது ட்ருத்..!" அகில்
வாதம் சூடு பிடிக்கும் அறிகுறி லேசாய் தெரிவதற்குள் காமேஷ் உஷாராய் டாப்பிக்கை மாற்றி விட்டான்..
"மச்சி.. அங்க பாரு சூப்பரா இருக்கு இல்ல.!!"
அன்று பௌர்ணமி.
மாலைச் சூரியன் ஒரு பக்கம் மங்க, மறு பக்கம் தங்க நிறத்தில் நிலவு ஏரிக்கு மேலே எழுந்து, ஏரியை தங்கமாய் மின்ன வைத்துக் கொண்டிருந்தது.
அன்று லேசான தலை வலியில் இருந்த அர்ஜுனும் வாதிட மனமில்லாமல், டாப்பிக்கில் இருந்து நழுவியவனாய் , "சூப்பர் மச்சி "என்றான்
"அழகு மச்சி.."அகில் மெய் மறந்தான்.
"என்ன ஒரு லைட்டிங் மச்சி.. இப்படி ஒரு லைட்டிங்க அப்படியே கேமராவுல கேப்சர் பண்ணுனா எப்படி இருக்கும்!! லூசு மாதிரி நம்ம ஊர் படத்துல பெருசா லைட் வெச்சு செட்ட போட்டு ப்ளூ பில்ட்டர் வெச்சிடராணுக. அதுல ஹீரோ, ஹீரோயினும் ரோமேன்ஸ் ங்கற பேருல தண்ணிக்குள்ள விழுந்து ஆடற டேன்ஸ் வேற..!!" காமேஷுக்குள்ளிருந்த சினிமா கலைஞன் வெளி வந்தான்.
"ஆமாம் மச்சி.."என்று அகில் ஏதோ தொடங்க வருவதற்குள்,
"போச்சுடா.. இவன் சினிமா பத்தி ஆரம்புச்சிட்டானா? அய்யயோ.. ஆண்டவா இந்த மொக்கையிலிருந்து என்ன காப்பாத்து..!!" என்று அசோக் சிவாஜியை விட அதிகமாய் ஓவர் ரியாக்ட்செய்தான்..
சினிமாவை, சினிமாவாய் பார்க்காமல், லைட்டிங், கேமரா வொர்க், ப்ளாட் பாயின்ட், சீன் சீக்வன்ஸ் என்று அக்கு அக்காய் பிரித்து மேய்ந்து பார்ப்பது காமேஷின் வழக்கம். ஹாலிவுட் என்பது மிகச் சிறந்த வணிக சினிமா. ஈரானிய, கொரிய சினிமாக்கள் சினிமாவின் மிகச் சிறந்த கலை வடிவம். இந்த இரண்டுக்கும் கூட்டில்லாமல் அரை வேக்காட்டுத் தனமாய் வரும் குப்பை மசாலா தமிழ் சினிமாவின் திசை மாற்றி எப்படியாவது ஒரு நாள் தான் இயக்குனராய் தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற கனவில் எந்த ஒரு சினிமாவைப் பார்த்தாலும் அதை ஆராய்ந்து அறுவை சிகிச்சையே செய்து விடுவான் காமேஷ். அது அசோக்கிற்கு எப்போதும் சலிப்பான விஷயமாகவே இருந்தது.
"நீங்க கொஞ்சம் மூடுங்க..சூரிய வம்சம் ரோசாப் பூ பாட்டுல, கண்ண மூடி கபடி வெளையாடுற ஹீரோயின் கால்ல ஆணி குத்தாம இருக்க, ஹீரோ கைய கீழ குடுத்து காப்த்தர சீனுக்கு, தார தார யா கண்ணீர் விட்டு, பக்க்கதுல இருந்தவன் மேல மூக்கு சிந்தி, பீல் பண்ணுனவன் தான நீ..!!" அகில் சிரிக்க,
"டேய்.. தம்பி.. அந்த பீலிங் கெல்லாம் உனக்கு புரியாது டா.. நான் கூட.." அசோக் தொடங்க..
"அய்யயோ..! அனிதா காலுக்கு கீழே கைய விட்டு காப்பாத்தினியா மச்சி..? எங்க கைய காட்டு..?" காமேஷ் கேட்க,
"மச்சி.. அத விடு மச்சி.. நீ என்னமோ சொல்ல வந்தியே.? என்ன?" அகிலும் அர்ஜுனும் காமேஷைப் பார்த்தனர்..
"இல்ல.. மச்சி.. மூன் லைட் ங்கறது ஒரு அற்புதமான லைட்டிங்.. அத நம்ம ஆளுங்க,அறையும் கொறையுமா ஹீரோயின் ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஹிரோ கூட டூயட் பாடற சீக்வன்சுக்கு யூஸ் பண்றத தவிர வேற என்ன பண்ணுனானுக..?" காமேஷ் கேட்க,
"மச்சி.. மச்சி.. ஒரு நிமிஷம் நீ சும்மா இந்த லைட்டிங், பைட்டிங்குனே பீலா விடறியே, எதாவுது சினிமா எடுக்க கத வெச்சுருக்கியா?" ஏதோ மிகப் பெரிய கேள்வி கேட்டு மடக்கி விட்ட பெருமிதத்தில் அசோக்..!
பெரு மூச்சு விட்டபடியே காமேஷ் தொடங்கினான் , "அட.. சென்னிமல.. ஒரு டைரக்டருங்கறவன் படத்த டைரக்ட் பண்றவன்.. அவனே கதையும் எழுதணும் கிறது தான் தமிழ் சினிமாவோட சாபக்கேடு.. அதனாலத் தான் தமிழ் சினிமா கதை எல்லாம் ஒரு ஹீரோயின், அவள லவ் பண்ற ஹீரோ , வில்லனா ஒரு மொரப் பையன்னு தரித்திரம் புடுச்ச மாதிரி இருக்கு. நம்ம தமிழ்ல நல்ல கதைக்கா மச்சி பஞ்சம், ஆயிரம் நாவல் இருக்கு, லட்ச கணக்குல புக்ஸ் இருக்கு, அகில், நீ பொன்னியின் செல்வன் மாதிரி இன்னொரு கத சொன்னியே..? அந்த கிரீக் ஆர்மி எல்லாம் வருமே என்னது..??"
"யவன ராணியா..?"
"ஊம்.. ஆமா அது தான். யவன ராணி.. அதுல சொன்னியே அந்த வார் சீன்.. பாம்பு மாதிரி எதிரி படை நிக்க, கழுகு மாதிரி பார்மேஷ்ன்ல கரிகாலன் ஆர்மி அட்டாக் பண்ணுவாங்கன்னு.. என்ன ஒரு சீக்வன்ஸ் மச்சி.. இப்ப இருக்கற டெக்னாலஜி யுஸ் பண்ணி அதெல்லாம் எடுத்தா,பெருமைக்கு இல்ல, சத்தியாம சொல்றேன் Gladiator எல்லாம் பிச்ச வாங்கணும். இதெல்லாம் விட்டுட்டு இவன் அவள லவ் பண்ணுனான், அவ அவனோட ஓடிப் போனா.. இல்ல குண்டு வெக்கற தீவிரவாதி, அவன கொதரி எடுக்கறது ஹீரோவோட தீராத வியாதின்னு சும்மா அரச்ச மாவையே அரச்சிட்டு..சே.." வெறுப்பானான் காமேஷ்..
"ஆனா நாவல் னா ரொம்ப பெருசா இருக்குமே.. ரெண்டர மணி நேரத்துல எப்படி மச்சி சொல்ல முடியும்." அர்ஜுன் கேட்டான்..
"God father ல இருந்து, Forrest Gump ல இருந்து, ஹிட்ச்காக் Psycho ல இருந்து, Jurassic Park வரைக்கும் எல்லாம் நாவல் பேஸ்ட் படம் தான்.. அவனால ஒன்ற மணி நேரத்துல நாவல சொல்ல முடியும் னா நம்மளும் தாராளமா சொல்லலாம். இல்ல சீக்குவல் பண்ணு..! சும்மா வெட்டியா ஹீரோ இன்ட்றோக்கு ஒரு பாட்டு, ஜட்டி போட்டுட்டு ஹீரோயின் இன்ட்றோக்கு ஒரு பாட்டு, அது கூட போடமா லவ் பண்ணும் போது ஒரு பாட்டு னு சும்மா நேரத்தையும் பிலிம் ரோலையும் நாசம் பண்ணிக்கிட்டு..!" காமேஷ் சீரியஸாய் சொல்லி முடித்தான்.
"கரக்ட் தான் மச்சி.. ஆனா நாவல் படம் னா கொஞ்சம் ஸ்லோவா இருக்கும்ன்னு யாரும் பாக்க வர மாட்டங்களே..!!" அகில் வருத்தமானான்..
"மச்சி.. நல்ல படம் எடுத்தா எல்லாம் பார்ப்பாங்க..! நாயகன, தளபதி ய விட வா ஒரு படம் ஸ்லோவா இருக்க முடியும்..? அது ஓடல??.. அதுவும் இல்லாம நாவல் பேஸ்ட் படம் எப்படி ஸ்லோவா இருக்கும்னு நீயே சொல்ற.. அந்த யவன ராணில வர அந்த குதிர ரேசும், பொன்னியின் செல்வன்ல வர த்ரிலும், அப்புறம் நம்ம சுஜாதா கதைல வர கணேஷ் வசந்த் டிடெக்டிவ் சீனும், இந்திரா சௌந்தர் ராஜன் கதைல வர மர்ம சீனும் நீ நெனச்சாலும் ஸ்லோவா எடுக்க முடியாது..!!" காமேஷ் சொல்ல,
"ஆமா மச்சி.. எஸ்.ரா மாதிரி, அசோகமித்திரன் மாதிரி கொஞ்சம் ஸ்லோவா இருக்கற நாவல் இருக்கு, ஆனா சுஜாதா எழுதின மாதிரி பாஸ்ட் நாவலும் இருக்கே, அத வெச்சு சூப்பர ஒரு என்டர்டைன்மெண்ட் படம் பண்ணலாமே..!!"
"மச்சி.. வெள்ளைக்காரன்,சினிமாவ ஔட் அண்ட் ஔட் பிஸ்னசா பாக்கறான்.. விண்டோஸ் மாதிரி, ஆப்பிள் ஐ பாட் மாதிரி, நியாயமான ஒரு ப்ராடக்ட்டா படத்த குடுத்து, நியமா பிசினஸ் பண்றான்.. நம்ம ஆளுக கலைச் சேவை பண்றேன்னு மளிகை கடைல அழுகன முட்டைய திருட்டுத்தனமா விக்கற மாதிரி அழுகிப் போன கதய காசாக்கராணுக..! எந்த டைரக்டரும் படிக்கறதில்ல, எந்த எழுத்தாளனுக்கும் கதைய சினிமா ஆக்கறதுக்கு காசோ, வசதியோ இல்ல." காமேஷின் வார்த்தைகள் ஊசி முனையை விட கூராக இருந்தது.
"நிஜம் தான் மச்சி.. இருக்கற கதைய எடுத்தாவே போதும்.. இதுல எதுக்கு இந்த எழுதப் படிக்கத் தெரியாதவனெல்லாம் கதங்கற பேருல கன்றாவி பண்ணனும்." அர்ஜுனும், காமேஷும் தலை அசைத்தனர்.
"அப்ப தான் மச்சி நாட்ல எழுத்தாளனுக்கும் கொஞ்சம் பேரும் , வாழ்க்கையும் இருக்கும்..! ஜே.கே ரௌலிங் மாதிரி, டேன் பிரௌன் மாதிரி நம்ம எழுத்தாளர்கள் எவன் சம்பாதுச்சுருக்கான்?" அகில் வருத்தப் பட்டான்..
"சரி சரி அதெல்லாம் இருக்கட்டும்..மச்சி..ஒரு ப்ரொடியூசர் கிட்ட போற, கத சொல்ல சொல்றாரு.. நீ என்ன தான் சொல்லுவ??" இதுவரை நடந்த சம்பாஷணையில் என்ன புரிந்ததோ அசோக்கிற்கு இப்படி ஒரு கேள்வி முளைத்தது..
"மச்சி..!" என்று காமேஷ் ஏதோ சொல்ல வருவதற்குள்,
"ஊம். ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சுன்னு சொல்லுவான்.." தலைவலி எரிச்சலோடு அர்ஜுன் கிண்டலடிக்க,
"உம்..ஊம்.. இதுக்கு எங்கிட்டயே நெறையா கத இருக்கு..! நானும் பிற்காலத்துல ஒரு டைரக்ட்டர் ஆயி படம் எடக்கனும்னு சின்ன வயசுல ஆசப் பட்டு எழுதி வெச்சுருக்கேன்..!" யாரும் எதிர் பார்க்காமல் ஸ்ரீசாந்த் சிக்ஸ் அடித்தது மாதிரி அடித்தான் அசோக்..
ஒரு நிமிட அதிர்ச்சிக்குப் பிறகு மூவரும் சுயநிலைக்கு வந்து வேறு எதோ டாப்பிகிற்கு தாவி விட்டனர்..
என்ன கதை..? என்ன கதை..? என்று யாரும் தொந்தரவு செய்து கேட்காதது அசோக்கிற்கு சங்கடமாய் இருந்தது.. அவனே தொடர்ந்தான்.
"நீங்க யாரு கிட்டையும் சொல்ல மாட்டீங்கன்னா சொல்றேன்..!!" ஆர்வத்தை கிளப்புகிறாராம் ..!
"இல்ல.. இல்ல நாங்க எல்லார்த்து கிட்டடையும் சொல்லிருவோம்.. சொல்லாதே..!!" அகில் சிரித்தான்..
"அட.. அது இல்ல மச்சி.. நல்ல கத லீக் ஆயிடக் கூடாதுன்னு பாக்கறேன்.. அது தான்.."
"டேய்..சாவடிக்காத டா.. ஏற்கனவே எனக்கு தல வலி..!" என்று அர்ஜுன் கடுப்பாய் கண்களை மூடிக் கொண்டான்..
"மச்சி.. இரு மச்சி.. என்ன தான் சொல்றான்னு பார்போம் .. நீ சொல்லு சென்னிமல.." காமேஷ் ஆர்வமானான்..
கட்டி வைத்த கண்ணுக் குட்டியை அவிழ்த்து விட்ட மாதிரி தொடங்கினான் அசோக்.."அது வந்து, கேமராவ ஓபன் பண்ணுனம்னா.. ஒரு அழகான கிராமம்.." அர்ஜுனுக்கு கண்ணைக் கட்டியது..
"அங்க ஒரு மைனர். போற வர பொண்ணுகள கலாட்ட பண்ணிகிட்டு இருக்கான்.! அவன் ஒரு பொண்ண கைய புடுச்சு இழுக்கறான்.. எல்லாம் அது ஹீரோயின் னு நெனைக்கறாங்க.. ஆனா அங்க தான் மச்சி கதையோட டிவிஸ்டே வெச்சுருக்கேன்.. அது தான் ஹீரோ..!! அப்படியே background ல நம்ம ஏ .ஆர் ரகுமான் மியூசிக் அலறுது.. ஹீரோ பொண்ணு மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்திருக்காரு வில்லன அடிக்க, அப்படியே வில்லன் கைய திருப்பி புடுச்சு பாவட தாவணியோட நம்ம ஹீரோ ஒரு பைட் போடறாரு பாரு.."
"மச்சி..! ஒரு நிமிஷம்.யாரு மச்சி ஹீரோ..?" காமேஷுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..
"அது இன்னும் பிக்ஸ் பண்ணல மச்சி.." அசோக்..
"ஷ்.. ஷப்பா! அந்த அளவுக்கு பரவா இல்ல.. தப்பிச்சாணுக.." அகில் சிரிக்க,
"ஷு..! கிண்டல் பண்ணுனா கதையோட கண்டிநிட்டி போயிடும்." என்று அசோக் தொடர்ந்தான். அர்ஜுன் தூங்கி விட்டான்..
"ரொம்ப தேங்க்ஸ்.. ஹீரோயின், சிரிப்பு, செருப்பு, ரோஜா பூ, செந்தூரபாண்டி பொண்ணு.. நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் பரம்பர பக, லவ், காதல், அன்பு, நேசம், கட்டுனா அந்த பொண்ண .." என்று பிட்டு பிட்டாய் சில வார்த்தைகள் விழுந்தது,வலியால் கண்கள் மூடி உட்கார்ந்திருந்த அர்ஜுன் காதில். சலிப்போடு காதுகளை மூடிக் கொண்டான்.
"மச்சி .. மச்சி.. இங்க ஒரு இன்டிரெஸ்டிங் சீன்.. " அர்ஜுனை எழுப்பினான் அசோக் "ஹீரோயினுக்கு பர்த் டே.. அப்ப ஹீரோனால ஹீரோயின் வீட்டுக்கு போக முடியல அடியாளுக ஹீரோவ வீட்டுக்குள்ள விடாம அடிச்சு வெரட்டி விடறாங்க. அப்ப ஹீரோ ஹீரோயினுக்கு பர்த் டே விஷ் சொல்லணும். என்ன பண்ணுவாரு..? எல்லாரும் யோசிக்கறாங்க? அப்படியே ஒரு சைலன்ஸ்.. " அசோக் ஒரு நிமிடம் நிறுத்தி மறுபடி தொடர்ந்தான்,
"டக்குனு நம்ம ஹீரோ மொபைல் போன்ல பர்த் டே டியூன , ரிங் டோனா போட்டு, வெளில இருந்து வீட்டுக்குள்ள வீசி எரியராறு மச்சி. அது கரக்ட்டா ஹீரோயினோட பர்த் டே கேக் ல போய் நிக்குது.. எப்படி!!!???!!!!" என்று டைடேனிக் கதை சொன்ன ஜேம்ஸ் கேமரூன் மாதிரி அசோக் அவர்களைப் பார்க்க, அங்கும் நிலவியது ஒரு சைலன்ஸ்.!
"மச்சி.. ஒரு சின்ன ரெக்வஸ்ட். இந்த கதைய யாரு கிட்டையும் சொல்லிற மாட்டீங்களே.." அசோக் ஒரு வழியாக கதையை முடித்தான்..
"மச்சி.. அத விட சின்னதா உனக்கு ஒரு ரெக்வஸ்ட்.. இந்த கதைய நாங்க கேட்டோம்ன்
அந்த இரவில், அவர்கள் மொட்டை மாடியில், உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்க, கீழே அறையில் பன்னிரெண்டு மணியை தொட்டதும் அர்ஜுன் போன் சினுங்கியது.
"Reminder Nadhu Birthday..!!"
"போங்க டா.. ரசனை இல்லாதவுனுகளா. உங்க கிட்ட சொன்னேன் பாரு.." அசோக் சொல்ல, அடக்க முடியாமல் சிரித்தனர். சிரிப்புச் சத்தம் கீழ் அரை வரை கேட்டதால் டெலிபோன் சத்தம் மொட்டை மாடியை எட்டவில்லை..!
சரியாக பத்து நிமிடம் கழித்து, மீண்டும் சினுங்கியது போன், இப்போது "Nadhini Calling.."
மூன்று நொடி இடைவெளியில் மறுபடியும் "Nadhini Calling" சினுங்கியது போன்.
இப்படி முப்பது முறை சினுங்கி சினுங்கி கடைசியாய் சுவிட்ச் ஆப் ஆகி விட, மணி 12:45 அவர்கள் மொட்டை மாடியில் இருந்து அரைக்கு திரும்பினர்.
ஏற்கனவே தலை வலியில் இருந்த அர்ஜுன், சுவிட்ச் ஆப் ஆனா போனைப் பார்க்கும் நினைவோ,தெம்போ இல்லாமல், "மச்சி.. விக்ஸ் எதா வெச்சுருக்கியா..? இந்த நாயோட கத கேட்டு தல வலி ஜாஸ்தி ஆயிடுச்சு.." என்று அசோக்கைப் பார்த்து முறைத்துக் கொண்டே படுக்கப் போய் விட்டான்.!
"The Subscriber you are trying to reach is either switched off or out of coverage area..
போனை வேகமாய் விட்டெரிந்து விட்டு, படுக்கையில் சாய்ந்தால் நந்தினி. கண்ணீரின் ஈரம் தலையணையில் பட்டு சில்லிட்டது..
தொடரும்..

No comments:
Post a Comment