எங்குஇருந்தோ வந்த பறவை..
கல்லூரி மண் தான் எங்கள் வேடந்தாங்கல்.."
இருக்கை எண் 40F..
விமானத்தில் தேடிப்பிடித்தான்
அகில்..
அறை எண் 402
கதவு திறந்தது..
"Excuse me.. I'm in seat 40F. If you don't mind please.."
"Hi I'm காமேஷ்.. ரூம் 402 வா..
கம் இன்.."
"oh.. I'm very sorry mate take your seat"
"தேங்க்ஸ்.."
கட்டி வந்த மூட்டை, முடிகளை
வைத்துவிட்டு
அமர்ந்தான் அகில்.."
"நீ என்ன கோர்ஸ் பா ?"
"நான் IT அங்கிள்." காமேஷ் சிரித்தான்.
"இவன் EEE பா " காமேஷ் கேட்காமலேயே பதில் வந்தது அகில் அப்பாவிடமிருந்து.
"நாங்க இந்த ஷெல்ப் எடுத்துக்கவா பா? " மகனுக்காக தூசியில்லாத ஒரு நல்ல ஷெல்ப் பார்த்து துண்டு போட்டார் அகிலின் அம்மா.
"ஹூம். ஓகே ஆண்டி.. தாரளம.."
அகில் வெட்கத்தில் காமேஷைப் பார்க்க , காமேஷ் சிரித்தான்.
நிமிடங்கள் நகர்ந்தது..
சின்ன சின்ன விசாரணைகளில்
சிநேகம் இருவருக்கிடையே
முன்னுரை போட்டது..
உரையாடல்கள் தொடர்ந்தது..
படித்த பள்ளி..
பிடித்த படிப்பு..
கணிப்பொறி ஆர்வம்..
1st செம் சிலபஸ்
8th செம் கேம்பஸ் என
ஏதேதோ..
எதிர் காலத்தில்
என்றோ ஒரு நாள்
இந்த உரையாடல்
நகைச்சுவையாகப் போவதை
உணராது மிகுந்த
அக்கறையோடு
நடந்த அரட்டை..
இறுதியாய்
பொதுதேர்வு மதிப்பெண்ணைத் தொட்டு,
"!?!?!?"
"சரி உங்களுக்கு இவ்வளவு வசதி செஞ்சு கொடுதிருக்கோம்
இனிமேலாவது நல்லா படிங்க.." என அகில் அப்பாவின்
மிரட்டல் கலந்த வாழ்த்தோடு
முடிவுற்றது..
கலங்கும் கண்களை சமாளித்துக் கொண்டு
"பத்திரமா இரு அகில்
ஒடம்ப பத்திரமா பாத்துக்கோ
பத்திரமா சாப்பிடு ..."
என ஆயிரம் பத்திரம் சொல்லி
தலை அசைத்தாள் அம்மா..
"சரி.. மா.."
பெற்றோரைப் பிரியும் போதெல்லாம்
கண்ணீர் விடும்
பதினேழு ஆண்டு கால
அகிலின் கண்கள்
கல்லூரியில்
வலது கால் வைப்பதாலோ என்னவோ
துளி சிந்த மறந்து
கொஞ்சம் அம்மாவின்
அறிவுரைகளால்
வெட்கமும் கொண்டது ..
கண்ணீர் திரைக்குள்
அவன் முகம் பார்த்து
"நீ இங்கியே இரு.. .
எல்லாம் எடுத்து செட் பண்ணு..
அப்பறம் மத்தவங்க வந்துட்டா எதுவும் எடுத்து வைக்க முடியாது..
நாங்க போய்கிறோம். "
தன் பிரிவால்
அவன் கலங்கிவிடக் கூடதென்பதற்கு
கஷ்ட்டப்பட்டு வழி கண்டுபிடித்தாள்
அம்மா.
தொடர் நாடகத்தில்
நடிக்கத் தெரியாத
நடிகர் போல
உள்ளிருந்த பாசத்தை
உணர்வாக்கத் தெரியாத தவிப்பில்
"சரி பாத்துக்கப்பா.."
விடை பெற்றார் அப்பா.
காரிடாரில்
நடந்து,
படி இறங்கும் போது
திரும்பி பார்த்து
கை அசைத்த
அம்மாவின் கரங்கள்
எத்தனை தடுத்தும்
மடை உடைத்து விட்டது..
கண்களில் அவன்
இத்தனை நேரமாய்
கட்டிய
அணைக்கட்டை..
"அகில் மெஸ்சுக்கு போலாமா?"
''ஊம்.. ஒகே.. இங்க ஒரே தூசில்லா" கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு அகில்.
கள்ளமாய் சிரித்தான் காமேஷ் "எனக்கும் அப்படி தான் இருந்துச்சு
கொஞ்ச நேரத்துல சரியாயிடும்"
"Excuse me Sir... What would you like to have? I have Red wine, White wine, Apple Juice.."
ஒரு அலங்கரித்த அழகு தேவதை அகிலை கேட்டாள் விடுதி மெஸ்சில்..
சே..! மன்னிக்கவும்..
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்..
"டீ ஏன் இவ்வளவு மோசமா இருக்கு..!?" புலம்பிக் கொண்டே குடித்தான் காமேஷ் விடுதி மெஸ்ஸில்..
மாறிய வரிகளைப் போல்
நம் வாழ்கை மாற
இன்னும்
பத்து ஆண்டுகள்..
பலபல போராட்டங்கள்..
எத்தனையோ வலிகள்..
துளித் துளியாய் கண்ணீர்..
அனுபவ அடியின்
ஆறாத காயங்கள்..
பாக்கி இருக்கிறது நண்பா
என்று சொல்லியிருப்பான்
அப்போதே தெரிந்திருந்தால் அகில்...
தொடரும்...

No comments:
Post a Comment