Thursday, March 20, 2014

...கற்க கசடற பகுதி 2


"நேற்று இல்லாத மாற்றம்  என்னது..
காற்று என் காதில் ஏதோ சொன்னது.."

நெஞ்சம் நிறைந்த
நினைவுகளோடு
டைரியின்  பக்கங்களைப்
புரட்டினான்
அகில்..

ஆகஸ்ட் 20, 2003.....

கிழக்குப்  பரப்பில் சூரியன்
விளக்கு வைத்த போது
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்
நூறுக்கும் நூற்றிப்பத்துக்கும்
இடைப்பட்ட இடைவெளியில்
அவனை அவன்
பெற்றோரோடு
அழைத்துச் சென்று  கொண்டிருந்தது
அந்த கார்..

அது ஒரு பயணம்..

அது வரை
அவன் வாழ்க்கை பாதையில்
காணாத பூமியை
காட்டப் போகிற பயணம்..

பள்ளிச்  சிறையின்
பதினான்கு ஆண்டு கால
போராட்டத்தில்
பொதுத் தேர்வுச்  செக்கிழுத்து..
நுழைவுத் தேர்வுக்  கல்லுடைத்து..
பெற்றோர், உற்றோர், கற்றோர்,
வகுப்பறையில் கல்விக்கு இலவசமாய்
கசையடிகள் விற்றோர்..
இன்னும் ஏதேதோ மற்றோர் -
என எத்தனயோ வார்டன்களின்
கண்காணிப்பில்
கண்கலங்கி
கசந்து போன அவன் வாழ்க்கைக்கு
கல்லூரி வானத்தின்
சுகம் சொல்லப் போகிற பயணம்..

அவன் அறிவுக்கும்
கற்ற கல்விக்கும்
இடையே  இருந்த
இடைவெளியிலேயே
எப்போதும்
தேர்வுகள் நடத்தப்பட்டதால்..
பள்ளிப் பட்டறையில் அவன்
இயந்திரம் ஆவதை
இளமையின் இன்பங்கள்
தடுத்து நிறுத்தியதால்..
வகுப்பறையில்  நடக்கும்
அறிவுப் போர்களில்
எப்போதும் வெள்ளைக் கொடி பிடித்து
பவணி வந்ததால்..
பள்ளியில்
வழுக்கி விழுந்தவனாய் அவனை
வசை பாடியது உலகம்..

சென்னைக்குப் பக்கத்தில்
யாரோ ஒருவன்
எதற்காகவோ
என்றோ கட்டிய,
உலகத் தரமாய்
உள்ளூர் கல்வியை சொல்லித் தரும் - ஒரு
கல்லூரியில் அவன் தந்தை
டொநேஷன் கட்டியதிலிருந்து
முடிவுக்கு வந்தது அவன்
மேற்படிப்பிற்கான கலகம்..

நுரைக்க நுரைக்க
நாளையிலிருந்து தொடங்கவிருக்கும்
கல்லூரி வாழ்கையின்
கனவுகள்
அவன் கண்களில்..

நிறைக்க நிறைக்க
என்றுமே ஒரே குரலில் ஒலிக்கும்
அம்மாவின்
அறிவுரைகள்
அவன் காதுகளில்..

வாழ்கையில் மறக்க முடியா
பாதையாகப் போகிற
அந்த சாலையை -
அறிமுகமில்லா முகத்தைப் பார்ப்பது மாதிரி
பார்த்துக் கொண்டே தொடர்ந்தது அவன்
பயணம்..

நான்கரை மணி நேர பயணம்..
விடுதி வாசலில்
வந்து நின்றது கார்..

முகங்கள் முகங்கள்
சுற்றி சுற்றி முகங்கள்..
வித வித விதமாய்
வாலிப முகங்கள்..
பயந்த முகங்கள்..
பயமுறுத்தும் முகங்கள்..
அறிவு முகங்கள்..
அறியாமை முகங்கள்..
கிராமத்து முகங்கள்..
கதநாயகன் முகங்கள்..
அழுத முகங்கள்
அராஜக முகங்கள்..
அடடா
இதில் எத்தனை
முகங்களை
நேசிக்கப் போகிறோம்..
எத்தனை முகங்களை
துவேசிக்கப் போகிறோம்..
எத்தனை முகங்களை
மறுபடி ஒருமுறை பார்க்காமலேயே
மறக்கப் போகிறோம்..
சிந்தித்தபடியே ..
முகத்தோடு முகமாய்
மறைந்தது அகிலனின்
முகம்..

பயமும்
பரபரப்பு மாய்
மாறி மாறி
துடித்தது அவன் அகம்..

திறந்த வாசலில்
கால் வைத்தான்.

"பேர் என்னப்பா..?"
விசாரித்த குரலுக்கு
விடை சொன்னான்..

"ஊம்ம்.. அகிலன்...? அகிலன் சந்திரமூர்த்தியா..?"
"ரூம் நம்பர் 402 பா.."
"போர்த் ப்லோர்"
"திங்க்ஸ் எடுத்துட்டு போ. தெரந்து தான் இருக்கும். ஆள் வந்தாச்சு ஏற்கனவே."

"Akilan Chandramoorthy. This is the Final Boarding call for Flight MH416 Malaysian Airlines" அலறியது..
ஒலிபெருக்கி
மெல்பெர்ன் விமான நிலயத்தில்..

அவசர அவசரமாய்
டைரியையும்
சிந்தனையையும்
மடித்து உள்ளே வைத்த படி..
ஆவனங்களோடு விரைந்தான்
விமான கதவுகள் நோக்கி அகில்..

தொடரும்..

No comments:

Post a Comment