"ஓகே.. டோண்ட் மேக் எனி நாய்ஸ் .. ஆல் கோ டு லைப்பிரேரி அண்ட் பினிஷ் தி அசைன்மென்ட் ஐ கேவ் எஸ்டர்டே "
வகுப்புகளுக்கு முக்கால் வாசி நேரம் ஓய்வு கொடுத்து விடும் அந்த ஆசிரியை மேல் மாணவர்களுக்கு அப்படி ஒரு பிரியம். மெரினா ல கண்ணகி சிலை பக்கத்தில் ஒரு சிலை வைக்கனும் மச்சி , என்ற அளவுக்கு.
(பி.கு. கதை நடக்கும் காலத்தில் கண்ணகி சிலை சேதாரம் இன்றி இருந்த இடத்திலேயே இருந்தது..!)
"இப் ஐ சி சம் ஒன் வித் பேட் இன் தி கிரௌண்ட்.."
"நோ மேம்.." களுக் சிரிப்போடு கோரஸ் ஒலி
"ஏய்.. ஐ செட் டோண்ட் மேக் எனி நாய்ஸ்.. ஒகே.. இப் யு ஹேவ் எனி டவுட் கம் அன் சி மீ இன் ஸ்டாப் ரூம் .."
"மச்சி .. எத்தன ஓவர் டென் னா ? இல்ல பிப்டீன் வச்சுகலாமா ?"
நியாமான சந்தேகம் தான்! ஆனா இத எப்படி மேம் கிட்ட கேட்டு கிளியர் பண்றது. அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து கிரௌண்டுக்கு கிளம்பினர்.
நான்கரை பேர் அடங்கிய ஒரு சிறு குழு ஐன்ஸ்டீனுக்கு போட்டியாய் ரிலேடிவிட்டி தியரி தயாரிக்க, லைப்பிரேரிகுச் சென்றது!
கணக்கு வைக்க முடியாத அளவுக்கான ஒரு பெரிய குழு, தோனிக்கு போட்டியாய் கிரௌண்டுக்கு சென்றது!
அன்று அதிகாலையே ஏதோ ஒன்றுக்கு வழக்கம் போல அசிங்கபடுத்தப்பட்ட அகில் மூட் அவுட்டில் அமர்ந்திருந்தான், ஐன்ஸ்டீன் ஆகவும் ஆசைப்படாமல், தோனியாகவும் விருப்பப்படாமல் வகுப்பறையிலேயே விட்டத்தைப் பார்த்து அரட்டை அடிக்கும் கும்பலுடன்..
"அப்புறம் மச்சி .. என்ன தனியா உட்கார்ந்துட்ட?" அசோக்..
அய்யய்யோ.. இவனா?! இவன் கிட்ட தனியா மாட்டிகிட்டமே, என்று எண்ணிய படி அகில் "இல்ல மச்சி சும்மா தான் " நகர முற்பட்டான்..
அசோக்கைக் கண்டால் வகுப்பே அலறும்.
காரணம்..
வாசகர்களே பிளீஸ் .. அப்படியே கொஞ்சம் தலைய சைட் வாக்கா நிமித்தி விட்டத்த பாருங்க.. ப்ளாஷ் பேக் சொல்ல போறேன்.. ஊம் அப்படித் தான்..
"ஹாய்.. ஐ ஏம் அசோக்.?"
ஒரு நாள் வகுப்பு முடித்துப் போகும் போது முதல் முறை இருவரும் சந்தித்தனர்..
" ஹாய் நான் அகில்.." கை குலுக்கினர்
"எந்த ஊரு..?"
அகில் ஊர் பேர் சொல்லும் முன்,
"நான் சென்னிமலை மச்சான்.. உனக்கு சென்னிமல தெரியுமில்ல? ஈரோடு பக்கத்துல!!"
அகில் தலை ஆட்டும் முன்..
"சென்னிமலைல எங்க வீடு பாத்தேனா.. பஸ் ஸ்டேன்ட் பக்கத்துல .. மல ஏறறதுக்கு கொஞ்சம் முன்னாடி..!" என்று அசோக் தொடங்க சுற்றும் முற்றும் பார்த்தான் அகில். வா மச்சான் கேண்டீன் ல ஒக்காந்து ப்ரியா பேசலாம். ஆற அமர உட்கார்ந்து டிஸ்கவரி சேனல் டேவிட் அட்டன்பரோ மாதிரி தொடர்ந்தது அந்த ஸ்தல புராணம்..
"அந்த மல ரொம்ப பச்சையா அழகா இருக்கும்...அங்க மல மேல ஒரு முருகன் கோவில் இருக்கு மச்சான்..அதுக்கு போற ரோடு இருக்கு பாரு மச்சான்..அதுல பஸ் கூட போகும் மச்சான் .." அகில் மணி பார்த்தான், தூரத்தில் யாரவது வருகிறார்களா பார்த்தான்.. ஒருவரும் தெரியவில்லை..
"டெவலப்பிங் டவுன் மச்சான்.. தமிழ் நாட்டோட ஹன்ட்லூம் டவுன்.. அது தான்.."
"அங்க ஒரு பிட்சா ஹட் கூட இருக்கு மச்சான்.."
'என்னது.. பிட்சா ஹட்டா..??' தலை சுற்றத் தொடங்கி விட்டது அகிலுக்கு ..
டீ. ஆர். பட வசனம் மாதிரி இப்போதைக்கு நிற்பது மாதிரி தெரியவில்லை..
"மச்சான்.. எனக்கு கொஞ்சம் ஹாஸ்டல்ல வேல இருக்கு.." சமாளித்தான் அகில்..
"நானும் ஹாஸ்ட்டல் தான் போறேன் மச்சான்.. வாயேன் பேசிகிட்டே போலாம்..இன்னும் நெறைய இருக்கு மச்சான் எங்க ஊர் பத்தி.."
"??!!" ஆடிப்போய் விட்டான் அகில்..
சரியாக மூன்று மணி நேரம் 25 நிமிடங்கள் 37 நொடிகள்..
"சரி மச்சான்.. அப்புறம் பாப்போம். இன்னைக்கு டைம் இல்ல அப்புறம் இன்னும் நெறைய பேசுவோம். பை.." விடை பெற்றான் அசோக்.
'என்னது அப்புறமா??' நாடி நடுங்கி விட்டது அகிலுக்கு.
அன்றிலிருந்து அகில் எவ்வளவு அலேர்ட்டாய் இருந்தாலும் சில சமயம் மாட்டிக் கொள்வதுண்டு. இன்று போல!
தலையை தூக்கிய வாசகர்கள் சுளுக்கு பிடிக்கு முன் கீழே இறக்கிக் கொள்ளவும்.. 'எண்டு ஆப் ப்ளாஷ் பேக்!'
"என்ன மச்சான் சும்மா இருக்கரேங்கற.. ப்ரீ பீரியட் தான .. வா மச்சான் பேசிட்டிருப்போம்."
'டேய்.. சொல்றத சரியா சொல்லு டா .. பேசிட்டிருப்போம் இல்ல.. பேசிடிருப்ப!!' மனசுக்குள் நினைத்துக் கொண்டான் அகில்..
"ஏய்.. சென்னிமல.." பின் இருக்கையிலிருந்து குரல் வந்தது..
"நம்ம ஃபேன்ஸ் தான் மச்சான்.. வாயேன் பின்னாடி போவோம்.."
அங்கே அர்ஜுன் கிதாரோடு உட்கார்ந்திருக்க, சுற்றி இருந்தது ஒரு கும்பல்,
அதுவரைக்கும் வகுப்புத் தோழர்களோடு ஏனோ அதிகம் பழகி இருக்காத அகில் கொஞ்சம் தயங்கி, பின் இந்த மொக்கையிலிருந்து தப்பிக்க அது தான் ஒரே வழி என்று எண்ணி எழுந்தான். இருந்தும் அர்ஜுனிடம் அன்று ஹாய் சொல்லி பல்ப் வாங்கியது ஞாபகம் வர அகிலுக்கு கொஞ்சம் உறுத்தியது, 'இவன் நம்மள மதிக்கவே மாட்டானே.'
"டேய் சென்னிமல.. என்ன சொன்ன உங்க ஊர்ல பீட்சா ஹட் இருக்கா..?" எவனோ கலாய்க்க..
அடப் பாவி இந்த கதைய ஊர் பூர சொல்லி வெச்சுருக்கானா? என்று அகில் எண்ணிக் கொண்டிருக்க..
எதற்கும் அசராத அசோக் அட்டன்பரோ (கசின் பிரதர் ஆப் டேவிட் அட்டன்பரோ ! )சொன்னார்..
"ஆமா மச்சான் அங்க ஒரு ஹட் ல பீட்சா குடுப்பாங்க.. அத தான் பீட்சா ஹட் நு சொன்னேன்..அத நீங்க தப்பா புருஞ்சுக்கிட்டா.. வாட் கேன் ஐ டூ "
"அடிங் கொய்யாலே..!" கொலை வெறியோடு கூட்டம் பாய்ந்தது ,
"ஓகே.. ஒகே.. எவ்ரி படி கூல்..நோ டென்ஷன்.." அசோக் சமாளித்து,
"டேய் அர்ஜுன்.. ஒரு பாட்டு போடுற " ஆணையோடு மிரட்டி பேச்சின் போக்கு மாற்ற நினைத்தான்.
"இவுரு பெரிய இவுரு.. போடா.." அர்ஜுன் கலாய்த்து விட,
"சரி எனக்காக போடாத அகிலுக்கு போடு.." அசோக்
"அப்பன்னா சரி.." என்று, இயல்பாய் அகிலைப் பார்த்து சிரித்து கிதாரை சீண்டினான்..
" என் இனிய பொன் நிலாவே.." அர்ஜுன் கிதாரிலிருந்து வந்த அமுத கானம் வகுப்பறையை நிறைத்தது.
"சூப்பர் மச்சி!" துள்ளி குதித்து கை கொடுத்தான் அகில் ..
'எல்லா கை குலு க்கல்களும்
ஒரே மாதிரி தான்
தொடங்குகிறது..
வாழ்வில் இதுவரை காணாத ஒரு
சுகமான நேசத்தைக்
கண்டு விட்ட களிப்போடு ..
ஆனால் சில மட்டுமே
நிஜமாய் இருக்கிறது..
சில நிஜத்துக்குப பக்கத்தில்
இருகிறது..
சில நரகமாகவே மாறிவிடுகிறது.. '
"மச்சி .. நம்ம அகில் கூட நல்லா கவித , பாட்டெல்லாம் எழுதுவான்..' அன்று அசோக் எதற்காக சொன்னானோ, 'விளைவை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் 'வீண் என்று சேகுவர சொன்னது மாதிரி இத்தனை நாட்கள் அவன் வார்த்தைகள் எந்த ஒரு விளைவை ஏற்படுத்த வில்லை என்றாலும், அந்த ஒரு வார்த்தை அகில் வாழ்கையில் ஏற்படுத்திய விளைவு,
"அப்படியா? ஊம் ஆமா.. ஆமா .. ஞாபகம் இருக்கு அன்னைக்கு கிளாஸ்ல இன்ட்ரோ போதே கேட்டேன்.. மச்சி ஒரு கவிதை சொல்லேன் . எனக்கு கவிதைனா ரொம்ப பிடிக்கும்.. பிளீஸ் " ஆர்வமானான் அர்ஜுன்.
இதுவரை தன் கவிதைக்கு கிடைக்காத ஆர்வம், அங்கீகாரம்.
"அது வந்து மச்சி..!" குழைந்தான்..
"அட சொல்லு மச்சான் .. இல்ல நான் சொல்லவா.." அசோக்..
"நீங்க கொஞ்சம் மூடும் .. நீ சொல்லு மச்சி.. நாங்க தான .." அர்ஜுன்
"காலேஜ் வந்த போது முதல் நாள் எழுதுனது மச்சி. மொக்கயா இருந்தா கோவ்ச்சுகாதீங்க" என்ற தற்காப்புப் பீடிகைகளோடு தொடங்கினான் அகில்,
"சுவாசம் தீண்டுது
ஏதோ ஒரு வாசம்..
வாழ்கைப் பாதையில்
இது ஒரு புது நேசம்..
மலருது புது தேசம் ..
இது ஒரு புது நேசம்!
நதியில் விழுகிறேன்
துளியின் துகலாய்
பகலில் கரைகிறேன்
நிலவின் சுவடாய்..
இசையில் நிறைகிறேன்
ஒலியின் அழகாய்..
பெருங் கவியில் மறைகிறேன்
வரியின் குரலாய்..
வானத்தில் இணைகிறேன்
என்னை ஒரு புள்ளியாய் உணர்கிறேன்!!"
என்று அகில் கவிதை முடிக்க ,
"வாய்ப்பே இல்ல மச்சான் சூப்பர்.. " அசோக் கை கொடுத்தான்..
"நல்லா இருக்கு மச்சி.. " பாராட்டுக்கள் வந்தது சில திசைகளிலிருந்து..
அகில், அர்ஜுனைப் பார்த்தான்..
"ம்ம்..'தா ன .. னா .. நா ன நா 'ஆ.. சூப்பர்.. அது தான்.." வாயை ஒரு மாதிரி வைத்து தனக்குள்ளேயே பேசிக் கொண்டு ,
அர்ஜுன் கண் மூடி கிதாரின் கம்பிகளை இழுத்தான்..
"மச்சி பஸ்ட் லைன் என்ன சொன்ன?"
......பாடல் 1- இங்கே கிளிக் செய்யவும்..
தொடரும்..

No comments:
Post a Comment