Sunday, March 30, 2014

...கற்க கசடற பகுதி 7


கடந்த காலாத்தின் பக்கம்
திருப்புங்கள்..
அன்று அழுத அழுகைக்காய்
இன்று சிரிப்பு வரும்..
அன்று சிரித்த சிரிப்புக்காய்
இன்று அழுகை வரும்..

அடடா..
கவித.. கவித ..
ஆனா Courtesy: கவிப்பேரரசு!


"என்னக்கித் தான் நம்ம
உருப்படியா இப்படி ஒரு கவித
எழுதறதோ?"

விமான இருக்கையில்
ஒருக்களித்துப்  படுத்தான் அகில்..

''மச்சி .. என்ன எழுதிட்டு இருக்க.." காமேஷ்

"இல்ல.. மச்சி .. சும்மா கவித .." வெட்கத்துடன் அகில்.

"ஓ .. சூப்பர் மச்சி.. கவித எழுதுவியா நீ.." காமேஷ் ஆச்சர்யமாக..

"எங்கிருந்து சுட்டது.." நக்கலாக உரையாடலின் உட்புகுந்தான் ராகவ்..

"அடிங்க.."

இதுவரை மொக்கைக்  கவிதைகளே  எழுதியிருந்தாலும்  ஒரு படைப்பாளனுக்கே உண்டான கோபம்.

"ஐ.. கவிஞர் கரடி முத்துக்கு கோபத்த பாரு..!" மீண்டும் சீண்டினான் ராகவ்..

விக்ரம், மனோஜ் இணைந்து கொள்ள, காமேஷ் செய்வதறியாது மௌனமாக..

கேலிச் சிரிப்பின் அம்புகள்!
கேடயம் ஏதுமின்றி அகில்!!

"அன்னைக்கு ரேகிங்ல நம்ம கரடி முத்து டான்ச பாத்திருக்கனும்  மச்சி நீ. ஐயோ சாமி  முடியல.."

பட்டறையில் ஏற்கனவே கூர் தீட்டப்பட்ட ஆயுதங்கள் தயார் நிலையில் இருந்தது ராகவிடம்..

வெடித்து சிரித்தது கூட்டம்..

"இவரு மட்டும் என்னவாம்.. மொக்கையா  ஒரு பாட்டு.." வார்த்தைகளை ஆயுதம் ஆக்கும் வித்தை தெரியாமல் தவித்தான் அகில்..

"மச்சி .. வயிற்றுக்கும் தொண்டைக்கும்னு நான் பாடறேன்.. அதுக்கு குடுத்தான் பாரு மச்சி ஒரு ரியேக்ஷன்.."

ராகவ் கொஞ்சம் அதிகப்படியாகவே அவர்கள் முன் ஆடிக் காட்ட,

பைத்தியமானது கூட்டம்.

அதற்குள் பக்கத்து அறை  பையன்களும் சேர்ந்து கொள்ள...

கேலிப் பொருளானான், இல்லை ஆக்கப்பட்டான் அகில்..

"அம்மா.. சாமி.. அகிலோட எப்பவுமே ஒரே காமடி தான் மச்சி .. அன்னைக்கு ஞாபகம் இருக்கா மெஸ்ல..?, "அப்பா.. இங்க இட்லி சரியாவே இல்ல பா. சாம்பார் தண்ணியா இருக்கு பா.பச்ச  தண்ணி வெள்ளைய இருக்குது பா."

அன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பாவிடமிருந்து அழைப்பு வர, உணவு சரியில்லை என்று புலம்பியது ஞாபகம் வந்தது அகிலுக்கு..

"அத இவன் எப்ப கேட்டான்.?" அகில் சிந்தித்து முடிபதற்குள் சிரிக்கத் தொடங்கி  விட்டது கூட்டம்..

கண்ணீரின் கரை தொட்டு விட்ட அகிலுக்கு
வார்தைகள் தமிழ்நாட்டுக்  காவிரியாகிவிட்டது..

"இவன் மட்டும் என்னவாம் அன்னைக்கு என்ன பாடியே  உயிர் எடுத்துட்டான் மச்சி.. சரியான மொக்க.." ராகவின் அணு ஆயுதத்துக்கு முன் அகிலின் பேப்பர் அம்புகள்..

சிரிக்க மறுத்தது கூட்டம்.

வலிக்கத் தொடங்கியது அகிலுக்கு.

"மச்சி .. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். அது மொக்க இல்ல இது தான் மொக்க.."

ராகவ் எது சொன்னாலும் சிரிக்க முடிவெடுத்து விட்ட கூட்டம் அதற்கும் சிரித்தது

அவசரமாய் அகிலிடமிருந்து டைரி பிடிங்கினான் ராகவ்,

"மச்சி இந்த கவிதைய கேளேன்.."

"மரத்துல இருக்குது காயீ
தூங்க தேவ பாயீ.." என்று இல்லாத கவிதையை இருப்பது போல் வாசித்தான்..

அது தெரிந்தும் சிரித்தது கூட்டம்.

"ஹாய்.. எவெரி படி ஸ்டாப்.. இப்ப நான் படிக்கிறது சீரிஸ் கவித. சுனாமி பத்தி.."

"ஓ  ஹோ.." கோரஸ் குரல்கள்..

"ஏ  கடலே.."

"அப்புறம்.."

"வேறென்ன.. பீ கடலே.. சீ கடலே..டீ கடலே.."

சிரிப்பில் சுய நிலை மறந்தது கூட்டம்.

வெறுப்பின் உச்சம் தொட்டு இறுதியாய் அழுதே  விட்டான்  அகில்..

கிண்டல் கேலியின் கோரப் பற்கள்
வாழ்கையில் முதல் முதலாய்
தாங்க முடியா வலி வர கடித்தது அகிலை.

கண்ணீர் திரையில் காட்சிகள் மறைய,
வேகமாய் எழுந்து
ரூம்  கதவை பலம் கொண்ட மட்டும்
வேகமாய் அடித்து
வெளியேறினான் அகில்.

சிரித்த கூட்டம் கொஞ்சம் நிறுத்தியது..

அகிலை தொடர்ந்து ராகவ் வேகமாய் ஓடினான்

"மச்சி.. மச்சி.. சாரி மச்சி..என்ன கோவ்ச்சுகிட்டயா? சாரி மச்சி.. சும்மா விளையாட்டுக்குத் தான். இப்படி சீரியஸ் ஆயிட்ட? இவ்வளவு சீரிஸ் ஆவேனு தெரியாது சாரி மச்சி." தோள்  பிடித்தான் ராகவ்..

தட்டி விட்டு வேகமாய் நடந்தான் அகில்.

"மச்சி சொல்றேன் இல்ல.சும்மா விளையாட்டுக்கு. சாரி டா.."

"போடா நீயும் உன் சாரியும்." முகம் திருப்பினான்..

"மச்சி..ப்ளீஸ்!"

நெடுநேரம் கெஞ்சி, கட்டிப் பிடித்து, கிட்டத் தட்ட முத்தம் கொடுத்து சமாதானப் படுத்தி அகிலை அறைக்கு கூட்டி வந்தான் ராகவ். இடையில் காமேஷும் கொஞ்சம் ஆறுதல் சொல்ல உன்மையிலேயே  கொஞ்சம் சமாதானமாயிருந்தான் அகில்.

"சரி.. எல்லாரும் கேளுங்க.. இன்னையிலிருந்து யாரும் நம்ம 'கவிஞர் கரடி முத்துவ '" - சிரிப்பு.

"சே..! சாரி மச்சி.. அடிங்க! எவன் டா சிருச்சது? (சிரிப்பு..) கவிஞர் அகிலன கலாய்க்கக்கூடாது. அத மீறி எவனாவது கலாய்ச்ச, நீ ஒன்னும் பீல் பண்ணாத மச்சி நான் இருக்கேன் .." தன்  பீரங்கிகளை கொஞ்சம் கேமப்லோஜ் செய்தான் ராகவ்..

எரிச்சலில் முகம் சிவந்தாலும் வேறு ஏதும் வழி தெரியவில்லை அகிலுக்கு.

"சரி மச்சி.. இன்னையிலிருந்து இதுக்கு ஒரு முற்று புள்ளி வெச்சுக்குவோம்.." சொன்ன ராகவ்

முற்று புள்ளி அல்ல அன்று தான் முதல் புள்ளி வைத்தான்..

தொடரும்... 

No comments:

Post a Comment