யாரோடு பேசுவது என்ற
குழப்பத்திலும்..
என்ன பேசவது என்ற கலக்கத்திலும்
அமைதியை
அரவணைத்துக் கொண்டு இருந்தது..
"Young budding Eelectrical Engineers..
I'm Aravind..
I take this honor to introduce myself before you as your Class in charge and
I will be handling Electrical Engineering -1 for you this...."
தடித்து வந்த ஆங்கிலமும், உடல் மொழியும்
அகிலின் மனதில்
வென்னீராடை மூர்த்தியாய் , M.S. பாஸ்கராய்
விரிந்திருந்த
விரிவுரையாளர் பிம்பத்தை
பொடிப் பொடியாய்
அடித்து நொறுக்கியது..
"Okay.. Let's get together and introduce ourselves.."
ஆங்கிலத்தின்
ஏவுகணைத் தாக்குதல்..
அவசர அவசரமாய்
தட்டுத் தடுமாறி
தன் மூளைக்குள்
தேக்கிவைத்த ஆங்கில டம்ளருக்குள்
கைவிட்டு
ஒன்றிரண்டு வார்த்தைகள் பொறுக்கி எடுத்தான்..
ஆசையோடு
"A" வில் பெயர் வைத்த அப்பாவால்
L.K.G இல் இருந்து
இன்று வரை படும் அவஸ்த்தை அல்லவா இது..
"Yes. Akilan Come to stage and Introduce yourself. Let us know about your Hometown, School, Hobbies and Interest."
அடப் போங்கய்யா..
சலிப்புக்கும்
சல சலப்புக்கும்
இடைப்பட்ட இடைவெளியில்
மேடை ஏறினான்..
"My...
.............
.............
and My hobbies are Reading books and Writing verses in Tamil.
அகிலுக்கு எங்கிருந்தோ ஒரு களுக் சிரிபொலி கேட்ட மாதிரி ஒரு பிரம்மை தோன்றியது.
"Fair Enough.. Next in Order..
Arjun.."
பேசிய பதற்றத்தில் அகில் கிழ் இறங்க ,
பேசப் போகும் பதற்றத்தில் அர்ஜுன்,
எதிர் எதிரே முட்டிக் கொள்ள
"சாரி.. "
நகர்ந்தனர்..
"I'm Arjun from Coimbatore..
I studied in ......
.... and my hobbies are
Listening to music அண்ட் PLAYING GUITAR "
வகுப்பில் இருந்த
நாலே நாலு தேவதைகளும் ஒரு முறை
திரும்பிப் பார்க்க..
அதை மற்ற மாணவர்கள்
கொஞ்சம் வெறியோடு பார்க்க..
"சும்மா சீன் இல்ல..
நான் கூடத் தான் கர்நாடிக் சிங்கர்
அத சொல்ல முடியுமா இங்க.."
ராகவ் அகிலின்
காது கடித்தான்..
சரியாக இருபது மூன்று நிமிடம் 58 நொடிகளில்..
"Hi I'm Ragav..
I'm from Tanjore.
.....................
.....................
and my hobbies are Listening to Music and Singing
and I'm practising Carnatic music for last 12 years.."
சில நேரங்களில்
சில மனிதர்கள்..
என்ற தத்துவம் எல்லாம் தெரியாத அகில்,
"பின்ன அவன் மட்டும் சொல்லுவான்
நான் சொல்லக் கூடதா.."
என்ற ராகவின் விளக்கத்திற்கு..
"நியாந் தான.." தலை ஆட்டினான்..
யுனிபார்ம் இல்லாத
12த் ஸ்டேன்டர்டாய்
நகர்ந்து முடிந்தன வகுப்புகள்.
முதல் நாள் கல்லூரி முடிவில்
இரண்டு முக்கிய விஷயங்களை
உணர்ந்தான் அகில்..
முதல் முக்கியமானது ..
"இங்கும் படிப்பும், புத்தகமும் நம்மை கதற கதற குதறப் போகிறது.."
இரண்டாவது அதனினும் முக்கியமானது..
"எல்லா கல்லூரிகளிலும், எல்லா வகுப்புகளிலும்
காஜல் அகர்வால்களும், த்ரிஷாக்களும்
படிக்க வருவதில்ல.. "
பய புள்ள தமிழ் சினிமாவ பாத்து
எவ்வளவு கெட்டுப் போயிருக்குது..
தொடரும்...

No comments:
Post a Comment