"இங்கிருந்து ஏரிக் கர வீயு சுப்பர் இல்ல.."
மொட்டை மாடி
மாலை நேரம்..
மஞ்சள் வெயில்
மயங்கும் சூரியன்..
எட்டிப் பார்த்தால் ஏரி ..
ஏகப்பட்ட பறவைகள்..
அண்ணாந்து பார்க்க வானம்
அணைத்துக் கொள்ள தென்றல்
செமஸ்டரின் முதல் நாள் கல்லூரி முடித்த களைப்பில் புத்தகப் பையை விட்டெரிந்து விட்டு, புது வீட்டின், சாரி புதிதாய் குடி வந்த வீட்டின் மொட்டை மாடியில் அணி சேர்ந்தனர் மூவரும்.
"ஏரில இன்னும் கொஞ்சம் தண்ணி இருந்தா சூப்பரா இருக்குமில்ல மச்சி.." அகில்
"எங்க அத தான் நம்ம சேர்மேன் போரப் போட்டு மொத்தமா உறிஞ்சி எடுத்தர்றானே." காமேஷ்
"தேங்கா மண்டையன்.. நம்ம கிட்ட பீச உறிஞ்சற மாதிரியே.." அலட்டாமல் அர்ஜுன் பன்ச் கொடுத்தான்.
"டேய்.. நல்லமுத்து ('வேறு யாரும் அல்ல காலேஜ் சேர்மேன் தான்') உன்ன மட்டும் என் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன் டா .." அர்ஜுன் சிரிக்க,
அகில் அடக்க முடியாமல் சிரித்து, சட்டென்று எதோ ஞாபகம் வந்தவனாய் "மச்சி !!.. நீ காலேஜ் சேந்த கத காமேஷுக்கு சொன்னதில்ல இல்ல.. சொல்லு மச்சி !சொல்லு! சொல்லு!.." அகில் ஆர்வமானான்.
"அது எதுக்கு இப்ப. விடு விடு..! நல்ல நேரத்துல எதுக்கு மூட ஸ்பாயில் பண்ணற." அர்ஜுன் மழுப்ப ,
"அப்படி என்ன கத மச்சி..?" காமேஷ் கேட்க,
"சொல்லு மச்சி.. நம்ம காமேஷ் தான." அகில் நச்ச,
"அட அது ஒன்னும் இல்ல மச்சி..எல்லாருக்கும் நடந்த அதே மொக்க கத தான் " அர்ஜுன் கதையைத் தொடங்கினான்..
பன்னெண்டாங்க் கிளாஸ்
பொதுத் தேர்வில்
படு தோல்வியும் அடையாமல்
பயங்கர வெற்றியும் அடையாமல் எதோ
பாசாகி,
பெற்றோர், உற்றோர் என அத்தனை
பேராலும்
கொத்து பரோட்டா போடப் பட்ட
என் இனிய எஞ்சினியரிஸ்..
இந்த உங்களுக்கு கதை சமர்ப்பணம்..
அன்னைக்கு எட்டு மணி நியுஸ் பாத்துட்டே காலைல டிபன் சாப்ட்டா, அமெரிக்காகாரன் அணு குண்ட போட்ட மாதிரி திடுதிப்பு ஒரு நியுஸ்.
"பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று பள்ளிகளிலும், இணையதளத்திலும் வெளியிடப்படும் என்று தமிழகத தேர்வுத் துறை ஆணையம் அறிவித்திருக்கிறது.."
நாலு நாலா வெளியூர் போயிட்டு நடு ராத்திரி தான் மச்சி திரும்பி வந்தோம்..
விடிஞ்சு எந்திருச்சா.. பஞ்சாயத்த கூட்டிட்டானுக..!
"என்னடா? இன்னைக்கே வா?? அடுத்த வாரம் னு தான சொன்னாங்க " பின்னாடி அப்பா முதுகை தட்ட, உள்ள போன இட்லி படக்குனு வெளிய வந்துருச்சு.
ஒரே நிமிஷத்துல "சரி சரி.. சாப்ட்ட வரைக்கும் போதும் கிளம்பு போலாம்.." பைக் சாவியோட நிக்கிறாரு அப்பா..
'ஏன் நைனா உசுர வாங்கற! பத்து நிமிஷம் லேட்டா போன ரிசல்ட்ட என்ன மாத்தியா ஒட்டிற போறான்' நெனச்சுட்டே நான் நைசா எஸ்கேப் ஆகலாம்னு பாத்தா,
வாசல்ல நிக்கறாரு வெறப்பா "இந்தா பேனா ,பேப்பர் மார்க் குறிக்க வேணும் இல்ல..ரிசல்ட் வருதேன்னு ஒரு துளி பொறுப்பு இருக்கா பாரு.. எரும.."
'இப்பவே திட்டி ஸ்டாக் வேஸ்ட் பண்ணிறாத .. ரிசல்ட் வந்த ஒடனே நெறையா தேவப்படும்னு' யோசிச்சிட்டே நிக்கறேன், "என்ட்ரன்ஸ் தான் மொத்தமா ஊத்தி மூடிட்ட இதுலையாவாது ஒரு ஆயிரத்த தாண்டுவியா..?" எங்க அப்பா கேட்டாரு பாரு ஒரு கேள்வி 'என்னது ஆயிரமா?' ஆர்ட் அட்டேகே வந்துடுச்சு மச்சி எனக்கு.. நான் வேண்டுனதெல்லாம்.. 'ஆண்டவா.. எல்லா சப்ஜக்ட்லையும் எப்படியாவுது என்ன பாஸ் பண்ண வெச்சுருன்னு தான்'
'ஏம்ப்பா எனக்கு எவ்வளவு அறிவு னு உனக்கு தெரியாதா..? ஏன் இப்படி அளவுக்கு அதிகமா ஆயிரத்துக்கெல்லாம் ஆச படற ..இது உனக்கே அடுக்குமா?' அப்பவே நெனச்சேன் மச்சி.. ஆனா சொல்லிருந்தேன்னு வை வண்டி ல எலுமிச்ச பழம் மாதிரி நசுக்கிருப்பாரு..
வெளில வந்து வண்டில எறுறேன்,
உனக்கு தான் தெரியுமே மச்சி நந்தினி எங்க பக்கத்துக்கு வீடு தான் னு, நந்தினி அவ அப்பாவோட..
"ஒடனே ஆயிரம் சிம்பொனி இசை கேட்ட மாதிரி இருந்துச்சா மச்சி.." அகில் கலாய்க்க..
"ஊம்.. தவில்ல தில்லான மோகனாம்பாள் வாசிக்கிற மாதிரி இருந்துச்சு.." என்று அர்ஜுன் டாப்பிக் மாற, அது வரை கதையில் மூழ்கியிருந்த காமேஷ், "அகில், சும்மா இரு டா. அப்புறம் என்ன ஆச்சு?"
"அப்புறம் என்ன ?ஏழ்நூறு மார்க்குக் பருட்ச எழுதிட்டு, ஆயிரம் வரணும்னு, அப்பா ஆசப் பட்டா மட்டும் ஆயிரமா வந்துடப் போகுதா? ஏழ்னூத்தி எம்பத்து நாலு தான் வந்துச்சு..!
ஆனா ஒன்னு மச்சி ஆண்டவன் நியாயஸ்த்தன். என்னோட நியாமான ஆசய நிறைவேத்திட்டான்.. எல்லா சப்ஜக்ட்லையும் பாஸ் ஆயிட்டேன்..!! 'எஸ் !! ஐ டிட் இட்!! ன்னு கத்தலாம்ன்னு நெனச்சா..', பக்கத்துல நந்தினி இருந்தா சோகமா..? கிட்டத் தட்ட அழுகிற மாதிரி "
அகில் சிரித்தான் ..
அர்ஜுன் அவனை முறைத்துப் பார்த்து, "அவளுக்கு மார்க் கம்மியாயிடுச்சான் மச்சி.. பையாலஜி ல செண்டம் எதிர் பார்த்தாளாம் 196 தான் வந்துச்சான்.. ஆயிரத்து நூத்தி இருபத்து ரெண்டு மார்க் மச்சி.. அழுதுட்டே வந்தா.. பக்கத்துல இருந்து ஏழ்னூத்தி எம்பத்தி நாலு மார்க் நான் ஆறுதல் சொல்லிட்டே வந்தேன்.." அர்ஜுன் சொல்லி முடிக்க, அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தனர் இருவரும்..
"நீ ஆம்பள நண்பா "அர்ஜுனை அணைத்தான் அகில்.. அதுக்கு மேல தான் மச்சி.. "கதையோட இன்ட்ரெஸ்ட்டிங் பார்டே.. வெளில கேட்' ல எங்க அப்பா .. நந்தினி அப்பா கிட்ட பேசிகிட்டிருக்காரு"
அப்ப தான் மச்சி உண்மையான அல்லு ஸ்டார்ட் ஆச்சு..!
"நந்தினி.. நீ போய்டே இரு.. நான் ஆனந்த பார்த்துட்டு வந்தர்றேன்..!" னு அப்படியே அங்கிருந்து அப்பீட்டாயி ஆனந்த் வீட்ல உட்கார்ந்திருக்கேன்..
போன் வருது ஆனந்த் வீட்டுக்கு.. "நீ எங்க இருக்கேன்னு எனக்கு தெரியும்.. இப்ப நீயா வரல நானே அங்க வந்து தர தரன்னு இழுத்துட்டு வருவேன்.. மரியாதைய வீடு வந்து சேரு..!"
" ஆனாலும் எங்க அப்பாக்கு குறும்பு ஜாஸ்தி மச்சி.. கூப்படறாரேன்னு பதறி அடுச்சு வீட்டுக்கு போன,உள்ள வந்த கால ஓடச்சுடுவேன்னு கதவ அடைக்கராறு !!" அர்ஜுன் சிரிக்க..
வெடித்துச் சிரித்து தரையில் உட்கார்ந்து விட்டனர் இருவரும்..
"நான் மியுசிக் படிக்கணும்னு தான் மச்சி ஆசப் பட்டேன்..எல்லாம் எங்க அப்பாவும், நந்தினி அப்பாவும் சேர்ந்து.." அர்ஜுன் சோகமாய் மரத்தின் கிளையை உடைக்க,
" ஹும் நான் கூட மச்சி விஸ்காம் படிக்கணும் மாஸ் மீடியாவுக்குப் போகனும்னு தான் நெனச்சேன்.." காமேஷ் பெரு மூச்சு விட்டான்.
"நந்தினி அப்பா வந்து அட்வைஸ் செஞ்சாரே அந்த கதைய சொல்லு " அகில் அர்ஜுனுக்கு எடுத்துக் கொடுக்க
"ஹும் .. ஒரு மனுஷன் செருப்படி வாங்குன கதைய இப்ப அவசியம் ஊர் பூரா சொல்லனுமா..? " அர்ஜுன் கடுப்பானான்.
"மச்சி.. கவலைப் படாத என்ன நடந்துருக்கும்னு எனக்கே தெரியும்..! பக்கத்து வீட்டுக்காரனுக அதுவும் அதிக மார்க் வாங்கற பசங்கள வெச்சுருக்கற பக்கத்து வீட்டுக்காரனெல்லாம் பருச்ச ரிசல்ட் வந்துருச்சுனா பாகிஸ்த்தான் தீவிரவாதி மாதிரி திரிவானுக..! எப்படா அடுத்த வீட்ல திரி கொளுத்தி அணுகுண்டு போடலாம்னு.!" காமேஷ் சிரித்துக் கொண்டே,
"நானும் விஸ்காம் படிக்க காலேஜ்ல அப்பிளிகேஷன் வாங்கி ஃபில் பண்ணிட்டு அப்பா கிட்ட சைன் வாங்க நின்னுட்டு இருக்கேன்.. கழுகுக்கு மூக்கு வேர்த்த மாதிரி வந்து நிக்கறான் பக்கத்து வீட்டுக்காரன்..விஸ்காம் எல்லாம் என்னங்க படிப்பு? தம்பி தெரியாம பேசுது.. எல்லாம் பணக்கார பொருக்கிப் பசங்க தான் சேருவாங்க.. இப்படித் தான் பாருங்க எங்க சொந்தக்கார பையன் ஒருத்தன் விஸ்காம் சேர்ந்து னு...... காதல் பட பாலாஜி சக்தி வேல் மாதிரி ஒரு டிராஜிடியை சொன்னான் பாரு மச்சி, அப்ப மாறுனவரு தான் மச்சி எங்க அப்பா..கடைசி வரைக்கும் மாட்டேன்னுடாரு .!!" சோகமாய் முடித்தான்.
"சாதனையாளர்களுக்கும் ,
சறுக்கி விழுந்தவர்களுக்கும் தான்
சுயமாக
சிந்திக்கும்
சுதந்திரம் இருக்கிறது போலும் ..!
சாதரனமானவர்களை
சமூகம் சிந்திக்க விடுவதில்லை..
அவர்களுக்காக அவர்கள்
சுற்றமே
சிந்தித்து விடுகிறது..!!
சுயத்தை எல்லாம்
சிதைத்து விடுகிறது..!
ஒரு வேளை இதற்குப் பெயர் தான் கூட்டுச் சமூகமோ ?"
அகிலுக்கு சட்டேன்று வந்த கவிதையை மறப்பதற்குள் டைரியில் எழுதி விட வேண்டும் என்று நினைத்தான்.. !
"அகில்.. என்ன பயங்கர யோசனைல இருக்க... நீ தமிழ் எம்.ஏ படிக்கணும்னு நெனைக்கலையா?" காமேஷ் திரும்பினான் அகில் பக்கம்..
அகில் சிரித்தான்.." நீங்க படிக்கணும்னு நெனச்ச கோர்ச பக்கத்து வீட்டுக்காரன் தான் ஏன் படிக்கறனு கேட்டான்..! நான் தமிழ் எம்.ஏ படிக்கணும்னு காலேஜ் போயிருந்தா காலேஜ்காரனே கேட்டிருப்பான்.. இந்த கோர்ஸ் படுச்சு என்ன பண்ண போரேன்னு...??"
"நிஜம் தான் மச்சி.." அர்ஜுனும் காமேஷும் முணுமுணுத்தனர்..
சட்டேன்று டாப்பிக் மாற்றியவனாய் அகில் கேட்டான், "மச்சி.. வீட்டுக்கு எக்ஸ்டிரா சாவி போடணும்னு சொன்னியே.. போலாமா?"
"ஊம்.. ஆமா மச்சி. வா போலாம் அப்பிடியே போய் ஒரு டி'ய போடுவோம்.." காமேஷ் தயாராக
அவர்கள் நடந்தனர்..
இன்னும்
எத்தனை தேநீர்
எத்தனை ஞானம்
எத்தனை சோகம்
எத்தனை மகிழ்ச்சி
பகிரப் போகிறோம் இணைந்து
தெரியாமல் நடந்தனர் மூவரும்
நெடுஞ் சாலைக்கு எதிரில் இருந்தது 'மணி நாயர் டீ ஸ்டால்!'
தொடரும்..

No comments:
Post a Comment